Announcement

Collapse
No announcement yet.

அனந் தாழ்வான்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அனந் தாழ்வான்

    வேங்கடவனையே வியக்க வைத்த ஆனந்தாழ்வானின் ஆதீத பக்தி!

    பகவத் ராமானுஜரின் முயற்சியில் வைணவம் வளர்ந்து கொண்டிருந்தது. அப்போது ராமானுஜருக்கு திருப்பதி மலைவாசனுக்கு கைங்கர்யங்கள் செய்ய யாரையாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதை சீடர்களிடம் ஒருமுறை கூறினார்.

    அந்தக் காலத்தில் திருப்பதி சென்று வருவது என்பதே அசாதாரணமானதோர் செயலாக இருந்த நிலையில், அங்கு சென்று தங்கி கைங்கர்யம் செய்வது எப்படி என்று ராமானுஜரும் மற்றவர்களும் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அனந்தாழ்வான் எனும் சீடர், ""ஆசாரியரின் திருவுள்ளப்படிக்கு அடியேன் மேற்படி கைங்கர்யத்தை ஏற்று நடத்திட அருள வேண்டும்'' என்று ராமானுஜரிடம் தெரிவித்தார்.

    ராமானுஜருக்கு அனந்தாழ்வானின் உறுதியான பேச்சு ஆனந்தத் தையும் நிறைவையும் தந்தது.

    ""இத்தனை சீடர்களின் மத்தியில் திருப்பதி கைங்கர்யத்தை ஏற்க விரும்பும் நீயன்றோ ஆண் பிள்ளை'' என்று பாராட்டி வழியனுப்பி வைத்தார்.

    திருப்பதி சென்ற அனந் தாழ்வான் திருமலையப்ப னுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்வது என்று தீர்மானித்து, அங்கு ஓர் ஏரியை அமைத்து நந்த வனம் ஏற்படுத்தி தனது கைங்கர்யங்களை ஆரம்பித்தார். அந்த ஏரிக்கு ராமானுஜர் ஏரி என்றே பெயரிட்டு தன் குருவின் கட்டளையை ஏற்று கைங்கர்யங்களைத் தொடர்ந்தார்.

    ஏரி வெட்டும்போது திருவேங்கடவன் ஒரு சிறு பிள்ளையாய் அவரின் உதவிக்கு வந்தான். ""நீ வேறு எங்காவது சென்றுவிடு. எனது குரு அடி யேனுக்கு இட்ட பணியில் பங்கு போட வராதே!'' என்று சிறுவனிடம் கூறினார். ஆனால் அந்தச் சிறுவன் பிடிவாதம் பிடிக்கவே, அனந்தாழ்வான் அவனை விரட்டி அவன்மீது ஒரு கடப்பாரையை வீசினார். அது சிறுவனின் முகவாய்க் கட்டையில் மோதி காயப்படுத்தியது. பின்பு சிறுவனும் ஓடிவிட்டான்.
    அனந்தாழ்வான் பூக்களைத் தொடுத்து மாலைகளாக்கி திருவேங்கடமுடையானுக்கு சமர்ப்பிக்கச் சென்றார். சந்நிதியில் நுழைந்து பெருமாளைத் தரிசித்த அவருக்குப் பேரதிர்ச்சி! பெருமாளின் முகவாய்க் கட்டை யிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவருக்கு தான் செய்த தவறு புரிந்து விட்டது. தனக்கு உதவ வந்தவன் தயாநிதியான வேங்கடவனே என்றுணர்ந்து, பெருமாளின் அடிபட்ட இடத்திலிருந்து ரத்தப் போக்கைத் தடுக்க பச்சைக் கற்பூரத்தை வைத்துப் பூசினார். ரத்தப் போக்கும் நின்றது.

    திருவேங்கடவன் எப்படியும் தான் அனந் தாழ்வானைச் சீண்டி அவனுடன் விளையாட வேண்டும் என்று விரும்பினான் போலும். மேலும் ஒரு திருவிளையாடல் புரிந்தான். அதன்படி இரவு வேளை களில் அனந்தாழ்வானின் நந்தவனத்துக்கு அரசன்- அரசி வேடத்தில் தன் பிராட்டியுடன் சென்று, பூக்களைப் பறித்து விளையாடிவிட்டு அப்படியே போட்டுச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான். காலையில் நந்தவனத்துக்கு வந்த அனந்தாழ்வான் பூக்கள் பறித்துப் போடப்பட்டி ருப்பதையும் தோட்டம் பாழாக்கப்பட்டது போலுள்ள நிலையையும் கண்டு, இப்படிச் செய்த வர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என நினைத்து, அன்றிரவு நந்தவனத்தின் ஒரு பகுதியில் ஒளிந்திருந்தார்.

    வழக்கம்போல் பெருமானும் பிராட்டியும் வந்தனர். அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க நினைத்தபோது, அரசனாக இருந்த வன் தப்பியோடிவிட, அரசகுமாரி அகப்பட் டுக் கொண்டாள். எப்படியும் இவளைத் தேடி அரசன் வருவான் என்று நினைத்து அவளை ஒரு மரத்தில் கட்டிப் போட்டார். (அனந்தாழ்வானுக்கு அவர்கள் பெருமானும் பிராட்டியும்தான் என்று தெரியாது.)
    மறுநாள் காலை திருவேங்கடமுடையா னின் சந்நிதியைத் திறந்த அர்ச்சகர்கள் பிராட்டி யைக் காணாமல் தவிக்க, பெருமாளே அவர் களிடம் நடந்தவற்றைக் கூறி அனந்தாழ்வானை யும் பிராட்டியையும் அழைத்து வரச் சொன்னார். அதன்படி அனந்தாழ்வான் சந்நிதிக்கு வந்த போது, உடன் வந்த பிராட்டி பெருமாளின் திருமார்பினில் ஒன்றிவிட்டதைக் கண்டு பதறி தன் தவறுக்கு வருந்திட, பெருமாளோ அர்ச் சகர்களைக் கொண்டு அனந்தாழ்வானுக்கு மாமனாருக்குரிய சகல மரியாதைகளையும் செய்து அனுக்கிரகித்தார்.

    பெருமாளுடன் பிராட்டியைச் சேர்த்து வைத்ததால், குருவருளால் தனக்கு இந்த பாக்கியம் கிடைத்தது என்று மகிழ்ந்தார் ஆழ்வான்.

    அனந்தாழ்வானுக்கு குரு பக்தி மிகவும் அதிகம். வைராக்கியமும் அதிகம். ஒரு நாள் அவரை நாகம் ஒன்று தீண்டி விட்டது. இருந்தபோதிலும் அதைக் கருத்தில் கொள்ளாது வேங்கடவனின் கைங்கர் யத்திலேயே ஒன்றியிருந்த தைக் கண்ட வேங்கடவன் அனந்தாழ்வானிடம், ""பாம்புக் கடிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளவில் லையே- ஏன்?'' என்று கேட்டார். ஆழ்வானோ, ""எளியேனுக்கு உமக்கு கைங்கர்யம் செய்வதிலேயே விருப்பம். பாம்பு வீரியமுடையதாயின் அடியேன் மரணத்தைத் தழுவினாலும் தங்களருளால் பரமபதம் சென்று அங்கு கைங்கர்யத்தைச் செய்வேன். கடித்த பாம் பினால் அடியேனுக்கு ஆபத்து ஏற்படவில்லை யாயினும் இத்திருமலையில் இருந்து கொண்டே உமக்குத் தொண்டு புரிவேன். எனக்கு இரண்டும் ஒன்றே'' என்று கூறிவிட்டார். ஆனால் திருவேங்கட முடையான் அருளால் ஆழ்வானுக்கு பாம்புக் கடியால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

    அனந்தாழ்வானின் வாழ்வில் திருவேங்கட வன் மேலும் ஒரு விளையாட்டைப் புரிந்தான். ஒரு சமயம் அனந்தாழ்வான் நோய்வாய்ப்பட்டு அவதியுறும்போது திருவேங்கடவன் நேரில் வந்து விசாரிக்காமல், வேறு நபர் மூலம் விசாரித்து வர அனுப்பி வைத்தார். வந்தவரிடம் அனந்தாழ்வான், "எளியேனை நேரில் வந்து விசாரிக்காமல் இப்படியா விசாரிப்பது?' என்று கேட்டதாகச் சொல்லியனுப்பினார். உடனே திருவேங்கடவன் நேரில் வந்து விசாரிக்க, ""நான் எனது குருவான ராமானுஜருடைய ஆணைப் படி உமக்கு கைங்கர்யம் செய்து கொண்டி ருக்கிறேன். அதைச் செய்ய விடாமல் தடுக்கும் உம்மிடம் பேச விரும்பவில்லை'' என்று சொல்லிவிட்டார் ஆழ்வான்.

    அனந்தாழ்வான் பரமபதம் அடைந்தபோது ஏழுமலையானே அவருக்கு இறுதிக்கடன்களைச் செய்தருள, அனந்தாழ்வான் ஒரு மகிழ மரமாய் மாறி இன்றும் நந்தவனத்தில் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இன்றும் வருடத்திற்கு ஒருமுறை ஏழுமலையான் அந்த நந்தவனத்துக்கு எழுந்தருளி ஆழ்வானுக்கு அருள்புரிந்து வருகிறார்.

    அனந்தாழ்வான் திருமலைக் கோவிலில் ராமானுஜருக்கும் சந்நிதி அமைத்தார். அவரையும் அனந்தாழ்வான் அமைத்த ஏரி, நந்தவனம் ஆகிய வற்றையும் இன்றும் திருமலையில் தரிசிக்கலாம். ஆழ்வான் மலையப்பன்மீது வீசிய கடப்பாரையையும் பிரதான கோபுர வாயிலில் இடது பக்கம் உட்புறத்தில் மாட்டி வைத்துள்ளதையும் காணலாம்
    மலர்க் கைங்கர்யம் செய்து பூமாலையும் பாமாலையும் சூட்டி மகிழ்ந்த ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நன்னாளில் அனந்தாழ் வான் ஏழுமலையானோடு இணைந்தார்.

    ராமானுஜரைப் பொறுத்தவரையில் அவருக்கு ஏற்பட்ட மகிமைகளுக்குக் காரண மாய் இருந்தவர்களில் கூரத்தாழ்வான், கிடாம் பியாச்சான், வடுக நம்பி, அனந்தாழ்வான் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    அனந்தாழ்வானின் விஷயத்தில் ஓர் முக்கிய அம்சம்- அவர் அவதரித்தது. சித்திரை மாத சித்திரை நட்சத்திர நன்னாள். அதே சித்திரையில், சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்த மதுர கவியாழ்வார் நம்மாழ்வாரையே தன் குருவாகக் கொண்டு அவரையே "தேவு மற்றறியேன்' என்று வாழ்ந்தவர். அதைப்போல அனந்தாழ்வானும் ராமானுஜரையே தன் குருவாக ஏற்று அவரின் சீடனாக வாழ்ந்தவர்.

    இவர் திருமலையில் ராமானுஜருக்கு அமைத்த சிலை மற்றைய தலங்களில் அமைந் துள்ளதுபோல் அஞ்சலி ஹஸ்தத்துடன் (கூப்பிய கரங்கள்) காட்சியளிக்காமல், உபதேசம் செய்யும் பாவனையில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

    Source:
    எம்.என். ஸ்ரீநிவாசன்

  • #2
    Re: அனந் தாழ்வான்

    கைங்கரியம் தான் பிரதானம். குருவின் கட்டளையை சிரமேற்கொண்டு தொண்டு
    புரிந்த அனந்தாழ்வார் புகழ் ஓங்கட்டும் . அக்கால குரு - சீடர் பக்தி வியக்கவைக்கிறது.
    இறைவனும் துணை நின்றது தனி சிறப்பு . அருமையான வரலாறு.
    தந்தமைக்கு மிக்க நன்றி .


    ஜி.ஜி.மூர்த்தி அய்யர்.

    - - - Updated - - -

    கைங்கரியம் தான் பிரதானம். குருவின் கட்டளையை சிரமேற்கொண்டு தொண்டு
    புரிந்த அனந்தாழ்வார் புகழ் ஓங்கட்டும் . அக்கால குரு - சீடர் பக்தி வியக்கவைக்கிறது.
    இறைவனும் துணை நின்றது தனி சிறப்பு . அருமையான வரலாறு.
    தந்தமைக்கு மிக்க நன்றி .


    ஜி.ஜி.மூர்த்தி அய்யர்.

    Comment

    Working...
    X