பிராமணர்களும் அக்ரஹாரங்களும்

விட்டு விலகி வந்துவிட்ட விவசாயத்தை பற்றி பிராமணர்கள் இனி பேசுவதில் எந்த பயனும் இல்லை என்று உணர்ந்தபின்னர் அந்த பிரச்சார பிரசங்கத்தை எட்டு வருடங்களுக்குப் பிறகு தலைமூழ்கியது நம் வாசகர்கள் முன் மொழிந்து ஏற்றுக்கொண்ட விஷயமே. விவசாயத்தை மூடிய பிறகு ஜனவரி மாத முகப்பு தலைப்பாக நாம் தேடி எடுத்துக்கொண்ட விஷயமே அக்ரஹாரம் ஆகும். 'அக்ரஹாரம்' என்ற சொல் அருவருக்கத் தக்கதாகவும் ஆபாசமானதாகவும் கருதி பிராமண எதிர்ப்பாளர்கள் வெளிப்படுத்தும் வக்கிர மற்று உக்கிர ஆவேச பேச்சுகள் இன்றும் நம் சமூகத்தில் அமலில் உள்ளன.

இந்த, இடைப்பட்ட சுமார் 10, 20 வருட காலங்களில், நமக்கு சற்று ஆறுதல் அளிக்கும் ஒரு சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையும் நாம் இங்கு வெளிப்படுத்த விரும்புகிறோம். 'அக்கிரமகாரர்களின் அகம்', 'அக்கிரஹாரம்' என்ற விதத்தில் பேசிய துக்கிரி பேச்சுகள் நம் பிராமன உள்ளங்களில் ஏற்படுத்திய சலசலப்பு, அச்சம் மற்றும் தடுமாற்றம் தற்போது சற்று குறைய தொடங்கியுள்ளன. பிராமணர் அல்லாதவர்களை இழிவுப்படுத்தி ஏசிய, வீண் செருக்குடைய பிராமணர்கள் வசித்த இடமாகவும் சில அக்ரஹாரங்கள் இருந்தன என்பதை நாம் ஒரு பதிவாக ஏற்றுக்கொள்வதில் தயக்கமில்லை. ஆனால், மிகைப்படுத்தப்பட்ட, விரும்பதகாத, அந்த கண்டிக்கத்தக்க ஒரு அம்சத்தினுடன் இணைந்து அக்ரஹாரங்களில் போற்றி வளர்க்கப்பட்ட ஒழுக்கமும் கட்டுப்பாடும் அனைவராலும் சரியாக புரிந்துக்கொள்ளப்படவில்லை. அக்ரஹாரங்களின் இந்த அம்சத்தை சரியான முறையில் பிராமணர்களே உணர்ந்து கொள்ளவில்லை என்பதால்தான் அக்ரஹாரங்களைப் பற்றிய சரியான மதிப்பீடு அவர்களுக்குச் சென்றடையவில்லை.

'ஏதோ இருந்தோம் அக்ரஹாரங்களில்' இனிமேல் அவ்விதம் தனியாக வசதி இல்லாமல் வாய்ப்புகளை ஒதுக்கிவிட்டு கிராமங்களில் வாழ்வது சாத்தியமில்லை. இரண்டு பக்கமும் கோவில்கள் இருந்தன என்பதை தவிர மெச்சி கொள்ளும்படி அக்ரஹாரங்களில் என்ன இருந்தது. வம்பு சண்டையும் வீண் அரட்டையும் மட்டுமே கண்ட பலன். பக்கத்து வீட்டு மாமாவும் எதிர்வீட்டு மாமியும் பிராமணர்களாக இருப்பதினால் மட்டும் என்ன வந்துவிட போகிறது?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇப்படி எல்லா வசதிகளுடன் நகரங்களில் வசிக்கும் நல்ல வாய்ப்பு அக்ரஹாரங்களை விட்டு வெளியே வந்ததினால்தானே கிடைத்தது. அடுத்த தெருவில் ஆங்கில கல்வி, அமயம் சமயம் என்றால் அருகில் ஆஸ்பத்திரி, ஒரு அடி எடுத்து வைத்தால் மளிகை, பால், காய்கறி கடைகள். கண்ணுக்கு தெரிகின்ற தூரத்தில் சினிமா தியேட்டர், டவுன் பஸ், இத்யாதி இத்யாதி வசதிகள் இவையெல்லாம் இருக்கும் நகரங்கள் போல் ஆகுமா அக்ரஹாரம்? எதிர்வீட்டில் இமானுவேல், பக்கத்து வீட்டில் பக்ரூதினும் இல்லை என்பதால் மட்டும் அக்ரஹாரத்திற்கு போய் அங்கு இருக்க முடியுமா?

மேலோட்டமாக நோக்கும் பொழுது இதற்கு மிஞ்சிய உண்மை எதுவும் இருக்க முடியாது என்று தோன்றும் இப்படிப்பட்ட கருத்துகள் எல்லாம் புறம்தள்ளி ஒதுக்கaவேண்டியவை என்று நாம் கூறவில்லை. யதார்த்தங்கள், மறுக்க முடியாத உண்மைகளாக, சில தருணங்களில் நம் எதிரே முன் நிற்பதை நாம் ஏற்றுக்கொள்ளவே செய்கிறோம். அக்ரஹாரத்தில் வசிப்பதின் மூலம் பிராமணர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான கல்வி, வேலை மற்றும் மருத்துவ வசதிகள் பறிபோகும் நிலைமை நிதர்சனமான பிறகு, அக்ரஹாரங்களை விட்டு பிராமணர்கள் வெளியேறுவது தவிர்க்க முடியாத காலத்தின் கட்டாயமாக, ஆதரித்து அனுமதிக்கப்பட்டுவிட்டது.