Announcement

Collapse
No announcement yet.

Sukla yajur vedham

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sukla yajur vedham

    “சுக்ல யஜுர்வேதம்” தோன்றிய வரலாறு- நெல்லை. வைத்யநாதன்ஸ்ரீ வேத வியாசர், தான் அறிந்த வேதங்களை, ரிக், யஜீஸ், சாம அதர்வணம் என்று நான்காகப் பிரித்து, தன் சிஷ்யர்களுக்கு உபதேசித்து உலகறியச்செய்தார். யஜீர் வேதம், வைசம்பாயனர் என்ற மஹரிஷிக்கு உபதேசிக்கப்பட்டது.ஒரு காலத்தில் வைசம்பாயன மஹரிஷிக்கும் அவரது சிஷ்யரான யாக்யவல்கியருக்கும், ஒரு விஷயத்தில் அபிப்ராயபேதம் ஏற்பட்டு, விவாதமாக உருவெடுத்து, யாக்ய வல்க்யர் ஆசிரமத்திலிருந்தே வெளியேற்றப்பட்டார். கடுமையான கோபம் அடைந்த யாக்யவல்க்யர்; அதுவரை உலகத்திலே யாவரும் அறியாத வேத நுணுக்கங்களை கண்டறிய வேண்டும் என்று சபதம் மேற்கொண்டார். தகுந்த குருவைத் தேடி அலைந்த அவருக்கு, பாக்கிய வசத்தால் சூரிய பகவானே ஆச்சாரியராக அமைந்தார். அந்த சூரிய தேவனைக் கீழ்க்கண்டவாறு துதித்தார்.ஓம்! மேன்மை தங்கிய சூரியநாராயணரே! நமஸ்காரம். ஆகாயம் போல் எங்கும் விரிந்து, பரந்து பிரம்மா முதல் கீழ்நிலை வரை நான்கு வகையான ஜீவராசிகளுக்கும் உள்ளிருக்கும் ஆத்மாவாக விளங்குபவரே!உமது தொடர் இயக்கத்தினால் அல்லவா, க்ஷணம், லவம், நிமிஷம் போன்ற அளவுகளினால் வருஷம் கணக்கிடப்பட்டு காலமானது, நிர்ணயம் செய்யப்படுகிறது.தாங்கள் அல்லவா உபரி ஜலத்தை ஆவியாகக் கிரகித்து, உரிய காலத்தில் மழையாகப் பொழிந்து, உலக ஜீவராசிகள் அனைத்தும் இயங்குவதற்கு ஆதாரமாயிருக்கிறீர்!ஓ! மேன்மை தங்கிய சூரிய நாராயணரே!வேதங்களின் வழி காட்டுதல்களை ஏற்று; காலை, மதியம், மாலை ஆகிய முக்காலமும் “சந்தியாவந்தனம்” செய்வோரின் பாபங்களைப் போக்குபவரே! பாபங்களின் விளைவுகளான கஷ்டங்களையும் அறியாமையையும் அழிப்பவரே! உங்களது ஒளிவட்டத்தில் இருந்து கொண்டு உமது தேஜஸைப் போற்றுகிறோம்.ஓ சூரியநாராயணரே!தாங்கள் அல்லவா ஜீவன்களின் பிராணம் ஆகவும், மனமாகவும், புலன்களாகவும், உள்ளிருந்துகொண்டு, அவர்கள் இயங்கி செயல்படுவதற்குக் காரணமான புத்திசக்தியைத் தூண்டுகிறீர்!ஜீவன்கள், தங்களது அறியாமை என்ற இருள் காரணமாக, கால சர்ப்பத்தின் வாயில் விழுந்து, இயக்கம் ஏதுமின்றி சவம் போல் ஆகிவிடுவோம் என்ற நிலை ஏற்படும்போது; கருணையுள்ளம் கொண்டவரே!ஒளிமயமான தங்கள் பார்வையினாலே, ஆத்மாவாக உள்ளிருந்து அவர்களை எழுப்பி, ஒவ்வொரு நாளும் தங்கள் நலனுக்காகச் செய்ய வேண்டிய ஆன்மிக அனுஷ்டானங்களைச் செய்யத் தூண்டுபவரே!எப்படி மன்னரைக் கண்டு குற்றம் செய்தோர் அச்சம் கொள்வார்களோ, அது போல, தாங்கள் செல்லும் பாதையிலே ஆங்காங்கே தென்படும் அக்ரமம் செய்வோர்களை, பயம் கொள்ளச் செய்பவரே!வழியெங்கும் உள்ள தேவதைகள் எல்லாம் தங்கள் கரங்களைத் தாமரை மொட்டுகள் போலே குவித்து, அர்க்யம் அளித்து தங்களை வாழ்த்துகின்றனரே! மூவுலக மகான்களும் பணிந்து போற்றும் தங்களது அழகிய பாதார*விந்தங்களிலே சரண் அடைகிறேன்; சூரிய பகவானே!யஜுர் வேதத்தில் இதுவரை யாரும் தெரிந்து கொள்ளாத, விசேஷமான பகுதிகளைத் தயை கூர்ந்து எனக்கு உபதேசம் செய்வீராக!சந்தோஷமடைந்த சூரிய பகவான், குதிரை உருவத்திலே தோன்றி, அதுவரை யாரும் அறியாத வேத மந்திரங்களை யாக்யவல்கியருக்கு உபதேசித்தார். இதுவே 15 பாகங்கள் கொண்ட “வாஜிநஸ்” என்ற சுக்ல யஜுர்வேதம் ஆனது.இந்த சுக்ல யஜுர் வேதத்தை பின்பற்றும் அந்தணர்கள் மாத்யந்தினர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.(ஆதாரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 12 அத்யாயம் 6)
Working...
X