ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதேவையானவை:

வறுத்த பாம்பே ரவா - 1/2 கிலோ
துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், குடமிளகாய் - எல்லாமாக சேர்த்து 2 கப்
நெய் - 2 - 4 டீஸ்பூன்
கொத்துமல்லி அல்லது புதினா - அலசி, பின் பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் - 2 - 4 பொடியாக நறுக்கவும்
உப்பு

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து, சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து,நீள் உருண்டை களாக உருட்டி, நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
எண்ணெய் நெய் அதிகம் இல்லாத உப்புமா போல இருக்கும்.