பெரியாழ்வார் திருமொழி :
***************************
பன்மணி முத்தின் பவளம் பதித்தன்ன'
என் மணிவண்ணன் இலங்கு பெற்றோட்
-டின் மேல் '
நின் மணிவாய் முத்திலங்க நின் அம்மை தன் '
அம்மணி மேற் கொட்டாய் சப்பாணி !
ஆழியங் கையனே சப்பாணி '
ஹே ! கிருஷ்ணா ! எனக்கு பணிவாணவ
-னாய் நீல ரத்தினம் போன்றவனே !
மாணிக்க, மரகத, புஷ்பராக, வைர, நீல ,
கோமேதக, வைடூர்ய, முத்து போன்ற
நவரத்னங்களாலும் , இனிய பவளமும்
பதிக்கபட்டு ஜகஜ்ஜோதியாக அழகோடு
ஒளிவீசுகின்ற பசும்பொன்னால் ஆன
காதணியின் சோபைக்கு மேல் உன
அழகிய அமுத வாயில் முத்துக்கள் ,
பச்சரிசி போல் பளீச்சென விளங்குகின்ற
கண்ணா ! உனது தாயாகிய என்னுடைய
மடியிலிருந்து சப்பாணிக் கொட்டாய் ,
திருவாழி மோதிரத்தைக்கரத்திலே
அழகாக அணிந்திருக்கும் கிருஷ்ணா !
சப்பாணி ,

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends