பன்னீர்ப் பூ இரவில் மலரும்.

* கார்த்திகைப் பூ என்றழைக்கப்படுவது காந்தள் மலர்.

* இரு குரங்கின் கை எனப்படுவது முசுமுசுக்கை.

* உலகின் மிகப் பழைய மரம் தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம். இதன் வயது 4,130 ஆண்டுகள்.

* உலகின் மிகப் பெரிய மரம் கலிபோர்னியாவில் ஸகோயா பூங்காவில் உள்ள ஷெர்மன் மரம்.

*உலகிலேயே மிகப் பெரிய பள்ளிக் கூடம் நம்இந்தியாவில் தான் இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்ள சிட்டி மாண்டிசேரி பள்ளிதான் உலகிலேயே மிகப் பெரிய பள்ளி என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில், சுமார் 22,612 மாணவர்கள் பயில்கின்றனர்.


*ஒட்டகத்துக்கு மூன்று இரைப்பைகள் உள்ளன.

* பெயர்கள் பற்றிய படிப்புக்கு ஓனோமாஸ்டிக் என்று பெயர்.

* இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ராஜாஜி.


* தங்கம் அதிகளவில் வெட்டி எடுக்கப்படும் நாடு தென்னாப்ரிக்கா.


* உலகின் மிகப் பெரிய பாலைவனம் சகாரா பாலைவனம். 90 லட்சம் சதுர பரப்பளவு கொண்டது இந்தப் பாலைவனம்.


* சாதாரணமாக ஒரு பல்ப்பின் ஆயுள்காலம் 3,000 மணி நேரம் ஆகும்.

* சிலந்திப் பூச்சிகளில் குண்டு வீசும் வண்டு என்ற ஒரு வகை வண்டு உண்டு. இவ்வண்டுகளின் வயிற்று அடிப்பாகத்தில் சிறிய சுரப்பி உண்டு. இந்தச்சுரப்பியில் உள்ள ஒரு வகை திரவமும் வெடிக்கம் தன்மை கொண்டது. அதனால் இதற்கு இப்பெயர் வந்தது.



* டென்னிஸ் மட்டைகள் மகாகனி, சிக்மோர், பீச் ஆகிய மூன்றுவித மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

* நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கணினி மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா ஆகும்.

* ஆஸ்ட்ரிச் என்னும் பறவை கல்லை தின்னும் தன்மை உடையது.

* உராங் உடான்என்ற குரங்கினத்தை "கானகத்தில் கிழவன்' என்று மலேசிய மக்கள் அழைக்கின்றனர்.

* ஒரே கவிஞர் இரு நாடுகளுக்குத் தேசிய கீதம் எழுதிய பெருமையைப் பெற்றவர் ரவீந்தரநாத் தாகூர். இவர் இந்தியா மற்றும் வங்கதேசத் தேசிய கீதங்களை எழுதியுள்ளார்.

* பத்திரிகைகளில் மலர், இதழ் என்று போடுகிறார்கள் எதற்கு தெரியுமா? மலர் என்றால் ஆண்டு என்றும், இதழ் என்றால் அந்த ஆண்டில் அதுஎத்தனையாவது இதழ் என்ற தகவலையும் தரும்.

* ரோஜா மலரின் வாசனை இதயத்துக்கு பலம் சேர்க்கும்.

* பாரி, ஆய் அண்டிரான், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடையேழு வள்ளல்கள் ஆவர்.

* தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாமல் இருப்பது போலவே, திருக்கோட்டியூர் மாதவன் கோயில் கோபுரத்தின் நிழலும் கீழே விழுவதில்லை.

* கவிச் சக்கரவர்த்தி கம்பரின் சமாதிஇராமநாதபுரத்திலுள்ள நாட்டரசன் கோட்டையில் உள்ளது.

* சீதையின் தந்தை பெயர் ஜனகர். தாயின் பெயர் சுநயனீ.

* துப்பாக்கியை ஏமப்பூட்டு, துமிக்கி என்றும், பீரங்கியை குண்டு குழாய் என்றும், ரிவால்வரை சுழலி என்றும் அழகிய தமிழ்ப் பெயர்கள் சூட்டி அழைத்தவர் தேவநேயப் பாவாணர்.