விலக்கான ஸ்த்ரீகளுக்கான தர்மங்கள்
ஆபஸ்தம்ப ரிஷி இம் மந்த்ரங்களுக்கு தம் க்ருஹ்ய சூத்ரத்தில் ப்ரயோகம் எழுதும்போது, கர்பாதானம் செய்வதற்கு முன்பு, தன் பத்நீ ருதுவாக (மாதவிடாய் காலங்களில்) இருக்கும்போது, ரஜஸ்வலா (விலக்கான ஸ்த்ரீ) நியமங்களை (யஜுர் ஸம்ஹிதை 2ம் கண்டம் - 5ம் ப்ரச்னம் - முதல் அநுவாகம் கடைசீ பஞ்சாசத் (பஞ்சாதி) உத்கோஷிப்பதை (கூறுவதை) உபதேசிக்க (கணவனால் மனைவிக்கு எடுத்துக் கூறப்படவேண்டும் என்று) விதிக்கிறார்.
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
கர்பம் தரிக்க காலம் ருது ஸ்நாநம் ஆகி (தூரம் குளித்ததிலிருந்து) 12 தினங்களுக்குள் தான். அதிலும் சில திதி வார நட்சத்திரங்கள் நிஷேதம் (தவிர்கக்ப்படவேண்டியது) உண்டு. அதிலும் இரட்டைப்படை தினங்களில் கூடினால்தான் புருஷ ப்ரஜைக்கு (ஆண் குழந்தைக்கு) ஹேது (வாய்ப்பு) என்றும், இல்லாவிடில் ஸ்த்ரீ ப்ரஜைதான் என்றும் விஷயங்களை நம் தர்ம சாஸ்த்ர சங்க்ரஹத்தில் விரிவாய்க் காணலாம்.
ரஜஸ் தோன்றிய அன்று அவள் சண்டாளிக்கு ஸமம்
இரண்டாம் நாள் ப்ரஹ்மஹத்தி (ப்ராம்மணணை கொன்ற) செய்தவளுக்குச் ஸமம்
மூன்றாம் நாள் வண்ணாத்திக்குச் ஸமம்
நாலாம் நாளும் ரஜஸ் ஸம்பந்தம் இருக்கும் ஆதலால் அவள் பாகம் (சமையல்) செய்வதற்கும், மற்ற வைதீக கர்மங்களுக்கோ உகந்தவளல்ல. அதேபோல் போகத்திற்கும் (உறவு கொள்வதற்கும் ) கூடாதவளே. அப்படிக் கூடினால் அதன் மூலம் பிறப்பவன் பதிதன் ஆவான்.
ஸ்நாநமாகியும் அரண்யத்தில் அவளோடு கூடி பிறப்பவன் திருடன் ஆவான்.
ருதுகால 3 தினங்களிலும் அவளுக்கு ஸ்நாநம் கூடாது. அப்படிச் செய்பவளுக்கு பிறப்பவன் நீரில் மரிப்பான்.
எண்ணை தேய்த்துக்கொள்ளல் ஆகாது. அப்படிச் செய்பவளுக்கு கெட்ட சருமம் (தோல்) உள்ளவன் பிறப்பான்.
(மேலும் என்னென்ன செய்யத் தகாத செயலுக்கு எப்படிப்பட்ட பிள்ளை பிறப்பான் என பட்டியலிடுகிறார்).
சீப்பு முதலியதால் தலைவாரிக்கொண்டால் - மயிரில்லாதவனும்
மையிட்டுக்கொண்டால் - ஒரு கண்ணற்றவனும்
பல் தேய்த்துக்கொண்டால் - கறுப்பு நிற பல்லுடையவனும்
நகத்தைக் கிள்ளினால் - கெட்ட(ஒழுங்கற்ற) நகமுடையவனும்
நூல் நூற்றால் - ஆணும்-பெண்ணுமற்ற நபும்ஸகனும்
கயிறு திரித்தால் - கழுத்தில் சுருக்கிட்டுக்கொள்பவனும்
பானங்களை இலையால் அருந்தினால் - பைத்தியக்காரனும்
கைகளால் திரவம் அருந்தினாலும்
உயரமற்ற சிறிய பாத்திரத்தால் அருந்தினாலும் - குள்ளனும்
பிறப்பார்கள். நீண்ட பாத்திரத்தைத்தான் நீர் முதலிய பானங்களை அருந்த உபயோகிக்க வேண்டும். ரஜஸ்வலையான (விலக்கான) 3 தினங்களிலும் இந்த வ்ரதங்களை (ஒழுக்கத்தை) கடை பிடிக்கவேண்டும். மேலும் இதுபற்றிய விசேஷ அம்சங்களை எமது ஸ்த்ரீ தர்மம்" என்கிற நூலினை படித்து அறியவும்.
Bookmarks