Announcement

Collapse
No announcement yet.

Story of Skanda sashti kavacam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Story of Skanda sashti kavacam

    Courtesy:Sri.KS.Ramki


    கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். அவ்வாறு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும், நோய் நொடிகளிலிருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.
    இந்த கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். தேவராய சுவாமிகள் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா?
    தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும்அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை. வாழ்க்கையே வெறுப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார்.
    அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார்.
    நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார்.
    அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும்.
    தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.
    அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்த,
    'சஷ்டியை நோக்க சரவண பவனர்
    சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்'
    என்று தொடங்கும் கவசம்.
    இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது. என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத்தரும்.
    முருகனுக்கு உகந்தநாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு. முருகனுக்கு முகங்கள் ஆறு. முருகனின் படை வீடுகள் ஆறு. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு, 'சரவணபவ' என்ற முருகனின் மந்திரம் ஆறெழுத்து, ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு பேன்றவற்றை குறிக்கும்.
    இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே. கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்குமே. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா?
    இத்த்னை சிறப்பு வாய்ந்தது இந்த கந்த சஷ்டி கவசம். இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும்.
    பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் பாடியதுதான் 'சண்முக கவசம்'. இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடதக்கது.
    Sourced from
    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%...AE%AE%E0%AF%8D
    கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.
    'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கும் கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்த நூல்தான் பெரிதும் போற்றப்படுகிறது. இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பழனி முருகன்மீதுபாடப்பட்டது. பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை பாடல் வரிகளில் எழுதுவது அக்கால மரபு என்கின்றனர்.
    நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு. [1]
    கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ளசென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் 'சிரகிரி வேலவன்' எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.[2]
    இந்தப் பாடலின் இசை வடிவம் பலரால் பாடப்பட்டுள்ளது. இதற்கு ஒளிக் காட்சி எதுவும் இல்லை, அதனால் முருகப் பெருமான் அலங்காரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளை இசையுடன் இணைத்துப் பல தொலைக்காட்சியில் காலையிலும் மாலையிலும் [3] ஒளிபரப்புகின்றனர்.
Working...
X