Announcement

Collapse
No announcement yet.

நிலவின் இருண்ட பக்கம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நிலவின் இருண்ட பக்கம்

    நிலவின் இருண்ட பக்கம்
    ( சிறப்பு )
    பூமியில் இருந்து பார்த்தால் தெரியாத நிலவின் இருண்ட பக்கத்தை, நாசா செயற்கைக்கோள் படம்பிடித்துள்ளது.
    நாசாவின் 'டீப் ஸ்பேஸ் க்ளைமேட் அப்சர்வேட்டரி' செயற்கைக்கோள், 10 லட்சம் மைல் தூரத்தில் இருந்துகொண்டு, கடந்த மாதம் நிலவின் இருண்ட பக்கத்தை புகைப்படம் எடுத்துள்ளது.
    சூரிய ஒளி வீசும் பூமியின் பக்கமாக நிலவு நகர்ந்தபோது இப்படிப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
    இந்தச் சாதனையை மேற்கொள்ள, அந்த செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டிருக்கும் 'எர்த் பாலிக்ரோமேடிக் இமேஜிங் கேமரா' முக்கியமான ஆதரவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்தச் செயற்கைக்கோள் நிலவைச் சுற்றி வரும் போது ஆண்டுக்கு இரண்டு முறை நிலவு மற்றும் பூமி இரண்டையும் ஒரே சமயத்தில் புகைப்படம் எடுத்து அனுப்பிவைக்கும்.
    -- பிடிஐ. ( தேசம் ).
    --'தி இந்து' நாளிதழ். வெள்ளி, ஆகஸ்ட் 7, 2015.
    Posted by க. சந்தானம்
Working...
X