Announcement

Collapse
No announcement yet.

'கட் ஆப்' மதிப்பு இப்படித்தான் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 'கட் ஆப்' மதிப்பு இப்படித்தான் !

    இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளில் சேர முக்கிய பாடங்களின் கூட்டுத் தொகையை கொண்டு 'கட் ஆப்' நிர்ணயிக்கப்படுகிறது.
    இன்ஜினியரிங் படிப்பில் சேர கணக்கு, இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு 'கட் ஆப்' நிர்ணயிக்கப்படும். மருத்துவ படிப்புக்கு உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களின் மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்படும்.
    உதாரணமாக கணக்கு பாடத்தில் 200, இயற்பியலில் 200, வேதியியலில் 200 மதிப்பெண் பெற்றிருந்தால் அவரின் கட் ஆப் 200 ஆக வரும். மதிப்பெண் வேறுபடும்போது கட் ஆப், மதிப்பெண்ணை எவ்வாறு கணக்கிடுவது என்பதற்கு, இன்னொரு உதாரணம் பார்க்கலாம். கணக்கு பாடத்தில் 190 மதிப்பெண் பெற்றிருந்தால் 190 ஐ, 2 ஆல் வகுக்க வேண்டும். இதன் மதிப்பு 95 ஆக வரும்.
    இதேபோல், இயற்பியல் பாடத்தில் 180 பெற்றால் அதை 4 ஆல் வகுக்க வேண்டும். மதிப்பு 45 ஆக வரும். வேதியியலில் 160 பெற்றால் அதை 4 ஆல் வகுக்க வேண்டும். இதன் மதிப்பு 40 ஆக வரும். இப்பொழுது இந்த மூன்று மதிப்பையும் கூட்ட வேண்டும். அதாவது 95, 45, 40 ஆகிய மூன்று மதிப்பையும் கூட்ட வேண்டும். இதன் மொத்த மதிப்பு 180 ஆக வரும்.
    இந்த மதிப்பே கட் ஆப் மார்க். இந்த மதிப்பெண்ணை வைத்தே இன் ஜினியரிங் படிப்புக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதேபோல், மருத்துவ படிப்பை பொறுத்தவரையில் உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு கட் ஆப் நிர்ணயிக்கப்படுகிறது. இதில், உயிரியல் பாட மதிப்பெண்ணை 2 ஆல் வகுப்பார்கள். வேதியியல், இயற்பியல் பாடத்தேர்வு மதிப்பெண்ணை 4 ஆல் வகுப்பார்கள். இதன் கூட்டு மதிப்பே கட் ஆப் மதிப்பெண்ணாகும்.
    -- தினமலர் நாளிதழ். சனி, மே 10, 2014.
    Posted by க. சந்தானம்
Working...
X