Announcement

Collapse
No announcement yet.

பொதுப் போக்குவரத்துக்குக் கைகொடுப்போம

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பொதுப் போக்குவரத்துக்குக் கைகொடுப்போம

    பொதுப் போக்குவரத்துக்குக் கைகொடுப்போம்

    ( சிறப்பு )
    இன்றைய உலகமயமாக்கல் கொள்கை அமலாக்கத் துவங்கிய பிறகு, வாகனத் தொழிலை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் செய்யப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக உயர்வர்க்கத்தினர் மட்டூமே கார் ஓட்டுவது என்பதுபோய், நடுத்தர மக்களும் ஏராளமானோர் கடனில் கார்வாங்கி ஓட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். தேவை என்பது போய், அந்தஸ்து என்ற போலிக் கவுரவதில் சிக்கிக்கொள்ளும் நிலையில் கொண்டுபோய் அது நம்மைத் தள்ளிவிட்டது. அதனால், ஒரே வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு கார் என்ற நிலைக்கு வந்துகொண்டிருக்கிறோம். காலையில் 8 மணி முதல் 10 மணி வரையிலான பீக் அவரில் ஏற்படும் நெரிசலின்போது, 99% கார்களில் ஒரே ஒருவர் மட்டுமே பயணிப்பதைக் காண முடியும். இதனால் காற்று மாசுபாடு மட்டுமல்ல, நம்நாடு இறக்குமதி செய்ய வேண்டிய கச்சா எண்ணெயின் அளவு அதிகரிக்கிறது. அந்நியச் செலாவணி வீணாகிறது. இந்நிலை மாற வேண்டுமென்றால், தேவைக்கு மட்டுமே காரை எடுப்பது, ஒருவர் மட்டும் பயணிப்பதைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்தை உபயோகிப்பது, அருகிலிருக்கும் இடங்களுக்கு சைக்கிளில் செல்வது போன்ற நடவடிக்கைகளை முடிந்த வரையில் மேற்கொள்ள வேண்டும்.
    --- கி. ரமேஷ், மின்னஞ்சல் வழியாக...
    -- இப்படிக்கு இவர்கள். கருத்துப் பேழை.
    -- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஜூலை 27, 2015.
    Posted by க. சந்தானம்
Working...
X