Announcement

Collapse
No announcement yet.

கரைகிறது எவரெஸ்ட்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கரைகிறது எவரெஸ்ட்

    கரைகிறது எவரெஸ்ட்
    ( சிறப்பு ).
    2100ல் மாயமாகும் அபாயம்.
    உலகின் மிக உயரமான சிகரம், இமயமலையில் அமைந்துள்ள எவரெஸ்ட் தான். இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரத்து 848 மீட்டராகும். வடக்கு நோக்கி நகர்ந்த இந்திய ஆஸ்திரேலிய தட்டு மற்றும் யூரேசியன் கண்டங்கள் இடையே நிகழ்ந்த மோதலால் இமயமலை உருவானது. இந்த மோதல் 7 கோடி ஆண்டுகள் முன் தொடங்கியது. வேகமாக நகர்ந்த இந்திய ஆஸ்திரேலிய தட்டு 5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தெதைஸ் என்ற பெருங்கடலையே முழுவதும் மூடிவிட்டது. இதன் இருப்பு அங்குள்ள படிவ பாறைகள் மற்றும் எரிமலைகள் மூலம் அறியப்படுகின்றது.
    இந்த படிவுகள் அடர்த்தி குறைவாக இருந்ததால் அவை கடலின் கீழே போகாமல் ஒன்று சேர்ந்து மலையை உருவாக்கின. மியான்மரில் உள்ள அரகான் யோமா உயர்நிலங்கள் மற்றும் வங்காள விருகுடா பகுதியில் உள்ள அந்தமான், நிக்கோபார் தீவுகள் இந்த மோதலால் உருவானதுதான். இப்போது இந்திய ஆஸ்திரேலிய தட்டு ஆண்டுக்கு 67 மி.மீ நகர்கிறது. அடுத்த 10 லட்சம் ஆண்டுகளில் இது ஆசியா கண்டத்தினுள் ஆயிரத்து 500 கி.மீ நகர்ந்திருக்கும். இதனால்தான் அடிக்கடி இந்த பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.
    2100ம் ஆண்டில் உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் கடுமையான பாதிப்பு அடையும்.
    பனிப்பாறைகள் உருகும். வெள்ள அபாயத்தில் மலை வாழ்வினங்கள் பாதிக்கப்படும். உருகும் பனிப்பாறைகளினால் நேப்பாலத்தில் தூத்கோசி ஆற்றின் நீரோட்டப் போக்கே மாறும். கிட்டத்தட்ட எவரெஸ்ட் சிகரத்தின் பனிப்பாறைகள் 70% உருகிவிடும். இந்த நூற்றாண்டுக்குள் எவரெஸ்ட் முழுமையாக மறைந்துபோய் விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரமே 3 செ.மீ. அளவுக்கு தென்மேற்கில் நகர்ந்தது குறிப்பிடத்தக்கது.
    ---- தினமலர். திருச்சி, 26-7-2015.
    Posted by க. சந்தானம்

  • #2
    Re: கரைகிறது எவரெஸ்ட்

    இந்த நிலைமைக்கு காரணம் வேதங்களில் சொன்ன வழிபாட்டு முறைகளை மறந்ததும், இயற்கையை அனுசரித்து போகாமல் அதற்கு எதிராக செயல் படுவதும், தர்ம நெறியிலிருந்து தவறி தவறான காரியங்களை பயம் இல்லாமல் செய்வதும் தான் இனிமேலாவது வரும் சந்ததியின் நலனை மனதில் கொண்டு இறை வழிபாடுகளை முறையாகவும் கூட்டு பிரார்த்தனை முதலிய சமுதாயத்தை நலப்படுதகூடிய, பலப்டுத்தகூடிய, வளப்படுதகூடிய செயல்களை செய்து இந்த அழிவிலிருந்து உலகை காக்க நாம் முயல வேண்டும்.


    சங்கர நாராயணன்
    RADHE KRISHNA

    Comment

    Working...
    X