Announcement

Collapse
No announcement yet.

உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவே

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவே

    [ISSU]அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா,
    பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,
    தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,
    பெரியப்பா பையன்,
    பெரியப்பா பொண்ணு,
    அத்தை பையன்,
    அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன், இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்
    காரணம்,
    ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!
    அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?
    பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!
    திருமணத்தின் போது அரசாணைக்கால் நட
    எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை, குழந்தைக்கு மோட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?
    கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள்,
    இனி யார் போவார்?
    ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி
    ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்
    ஒவ்வொரு ஆணும்
    தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்
    அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,
    அந்த ஒரு குழந்தையும்
    வெளியூருக்கோ
    இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால்
    ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!
    உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
    ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு
    எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
    இதே நிலைதான் !
    உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!
    சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்
    எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான் வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!
    கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு
    ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!
    ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!
    பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!
    ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!
    கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன்
    ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,
    வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு
    ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?


    Courtesy:World brahmins


  • #2
    Re: உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவ&a

    Dear PSN,
    What a thought provoking post.Yes, we are definitely going fast towards the scenario you described.It is like that of Nostradamus.Especially the sentence.."they will be like orphans and die all alone in the big house they constructed for their offspring or in an old age home".
    Sorry the punch is missing in English as I am forced to type in English from my small tablet.(BTW-I will be back in a week in India and posting in Tamil will start)
    It is time the Next zGen wakes up, have a minimum of 2 kids or 3 and not suport nuclear families.
    "Oodhara sangai oodhiyaachchu.Kaetpado, adhanpafdi nadappadho avargal ishtam"
    Varadarajan
    Last edited by R.Varadarajan; 07-09-15, 16:45.

    Comment


    • #3
      Re: உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவ&a

      நூற்றுக்கு நூறு உங்கள் கூற்று உண்மை. ஒரு குழந்தையுடன் நிறுதிக்கொள்ளுவதால் உண்டாகும் மற்றொரு கொடுமை என்னவென்றால் விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாமை. வரும் சந்ததியினர் சிறுதும் பொறுமை அனுசரித்து நடத்தல் சகிப்புத்தன்மை பிறருக்கு உதவுதல் போன்ற எந்த ஒரு நல்ல குணங்களும் இல்லாதவராகவே இருப்பார்கள்.


      குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்வதன் மூலம் இதை நிவர்த்தி செய்யலாம்.


      சு. சங்கர நாராயணன்
      RADHE KRISHNA

      Comment


      • #4
        Re: உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவ&a

        Yes Correct.When I was in Russia they too said the same.In their lingo, they say they woud like to have a full set! Meaning a boy and a girl ad children.How right they were!!
        Bring back the slogan,"NAAM IRUVAR, NAMAKKU IRUVAR,"at least.
        Varadarajan

        Comment


        • #5
          Re: உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவ&a

          Timely post especially after the declaration of senses We brahmins have to think a lot about

          Comment

          Working...
          X