நாடே கொந்தளித்த நிலையில் பதினாறாம் லூயி மன்னருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதா? மன்னிப்பதா? என்ற விவாதம் பிரெஞ்சு கன்வென்ஷனில் நடைபெற்ற போது மன்னருக்கு மரணதண்டனை என்று வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 361. மன்னருக்கு மன்னிப்பு கொடுப்போம் என வாக்களித்தவர் எண்ணிக்கை 334. இதிலிருந்து புரிவது என்ன? மரணத் தறுவாயிலும் செல்வாக்காகவே இருந்தார் பதினாறாம் லூயி மன்னர் என்பது புரிகிறதா?
ஏழாண்டுக் காலம் சிறியஓர் அறுவை சிகிச்சைக்குத் தயங்கி அல்ல கூச்சப்பட்டு மனைவியைத் திருப்தி செய்ய முடியாமல், அவளது தவறான அரசியல் முடிவுகளை ஏற்று நடந்ததால் ஒரு நல்ல மனிதர் அரசையும் உயிரையும் இழந்தார். ஏழாண்டுகளுக்குப் பிறகு தமது மைத்துனரின் உறுதியான ஆலோசனைப்படி அந்தச் சிகிச்சையை மேற்கொண்டார். இல்வாழ்வுத் தகுதி பெற்றார். ஆனால், அதற்குள் நாட்டு அரசியல் நிலை செப்பனிட முடியாத அளவு சிக்கலாகி இருந்தது. சின்னப் பிரச்சனைகளை உரிய காலத்தில் தீர்க்க விரும்பாதவர்கள் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும் புரிகிறதா?
-- வாழ்ந்து பார்க்கலாம் வா ! ( தன்னம்பிக்கை -- சுயமுன்னேற்ற நூலில் ).
-- சுகி . சிவம்.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.
Posted by க. சந்தானம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends