திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் உள்ள உச்சிப் பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா பிரசித்திபெற்றது. வரும் 17ம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி இக்கோயிலில் விநாயகருக்கு 150 கிலோ எடையில் பிரமாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட உள்ளது. இதில் பாதி மாணிக்க விநாயகருக்கும், மற்றொரு பாதி உச்சிப் பிள்ளையாருக்கும் படைக்கப்படும். விநாயகர் சதுர்த்தியன்று காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அர்ச்சகர்கள் மடப் பள்ளியில் இருந்து 150 கிலோ எடை கொண்ட கொழுக்கட்டையின் பாதியை உச்சிப் பிள்ளையாருக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்ட பின்னர் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.

இதே போல் 75 கிலோ எடை கொண்ட கொழுக்கட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு படைக்கப்பட்டு பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். கொழுக்கட்டை தயாரிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.17ம் தேதி இரவு பால கணபதி அலங்காரத்தில் விநாயகப் பெருமான் தனிச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். தொடர்ந்து தினமும் மாலை நாகாபரணகணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ கணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாருடர் கணபதி, சித்தி புத்தி கணபதி, நடன கணபதி என 13 நாட்கள் விநாயகர் பல்வேறு அலங்காரத்தில் தினமும் இரவு எழுந்தருளி வீதி உலா வர உள்ளார்.நிறைவு நாளான 30ம் தேதி மூலவர் விநாயகர், உற்சவர் விநாயகருக்கு 25க்கும் மேற்பட்ட பால், பழம், வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். - See more at: m.dinakaran.com

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு நேற்று கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா, செப்.8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி இரவு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று 6ம் திருநாளாக கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது. மாலை 6 மணிக்கு மேள தாளங்களுடன் விநாயகர் திருவீதி வலம் வந்து, கோயில் குளம் அருகே எழுந்தருளினார். அங்கு யானை முகத்தில் காணப்பட்ட சூரனுடன் போரிட்டார். பின்னர் சூரனின் யானை தலையைக் கொய்து சம்ஹாரம் செய்தார். பின்னர் இரவில் யானை வாகனத்தில் திருவீதி உலா வந்தார். செப். 16ல் தேரோட்டம், சந்தனக் காப்பு அலங்காரம், செப்.17ல் காலையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. ----DINAMALAR


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends