எது? எது? எப்ப? எப்ப?
" பதினாறாம் லூயி மன்னர் மட்டும் ஒரு சின்ன ஆபரேஷன் செய்து கொண்டிருந்தால் பிரெஞ்சுப் புரட்சியே நடந்திருக்க வாய்ப்பில்லை " என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும். ஓரளவு உண்மைதான் இந்தச் செய்தி.
பதினாறாம் லூயி மன்னரின் பிறப்புறுப்பில் ஒரு சின்ன குறைபாடு. இறுக்கமாகத் தோலால் மூடியிருந்தது. அதைச் சரிசெய்ய சின்ன அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அந்த அறுவை சிகிச்சை உலக முழுவதும் இன்று ஒரு மதச் சடங்காகக் கூட ஆகிவிட்டது. ஆனால் அவ்வளவு சாதாரணமான அறுவை சிகிச்சைக்கு மன்னர் உடன்படவில்லை. தயங்கினார். குழம்பினார். ஒத்திப் போட்டார். முடிவில் அவரது தலையே கில்லட்டின் மூலம் துண்டிக்கப்பட்டது.
ஆம். அவரது இந்தப்பிறவிக் குறைபாடு காரணமாக மன்னர் பதினாறாம் லூயி தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு மேற்கொள்ள முடியவில்லை. அவள் தன்னை விவாகரத்துச் செய்து அவமானப் படுத்திவிடக் கூடாதே என்பதற்காகவே அரசியின் எல்லா அநியாயங்களையும் மன்னர் சகித்துக் கொள்ள வேண்டியதானது, அவளது ஒழுக்கக் கேடுகள், முறையற்ற தொடர்புகள், அகங்காரமான நடவடிக்கைகள் குறித்து மன்னருக்கு அதிருப்தி இருந்தாலும் இந்த ஒரே காரணத்துக்காகவே அவளிடம் மன்னர் பணிந்து போனார். விளைவு அரசியின் அராஜக நடவடிக்கைகள் மீது ஏற்பட்ட கோபமே பிரெஞ்சுப் புரட்சியாகப் பிறகு வெடித்தது. மன்னர் மீது மக்களுக்கு அவ்வளவு வெறுப்பில்லை. மாறாகப் பாசம் இருந்தது என்பது ஓர் ஆச்சரியமான உண்மை!
-- வாழ்ந்து பார்க்கலாம் வா ! ( தன்னம்பிக்கை -- சுயமுன்னேற்ற நூலில் ).
-- சுகி . சிவம்.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.
Posted by க. சந்தானம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends