Announcement

Collapse
No announcement yet.

Vaishnavas discourage worship of other gods like Siva. Durga, Murugan etc? Why?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vaishnavas discourage worship of other gods like Siva. Durga, Murugan etc? Why?

    I hv a question-Why do Vaishnavas discourage worship of other gods like Siva. Durga, Murugan etc?
    Durga is regarded as Vishnu's sister.
    Astrologically, I am supposed to pray to Durga/Kali.
    Even in the Mahabharata. Lord Sri Krishna instructs Arjuna to worship Durga before the grear war.

    Pl let me know.
    Thx-Venugopal
    Thanks & Kindest Personal Regards
    Venu


    ஶ்ரீ:

    கீழ்கண்டவாறு சுருக்கமாக தெளிவடைய வைக்கலாம்.

    'அங்கான்யன்யா தேவதா:' என்கிறது வேதம்.
    இதன் பொருள் அனைத்து தேவதைகளும் பரமாத்மாவின் அங்கங்கள்.
    இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

    இதன் அடிப்படையில் அணுகவேண்டும்:
    அம்மாவின் கைகள் உணவைத் தருகின்றன - உணவு வேண்டும்போது அம்மாவின் கைகளை ஆராதிப்போம்.
    அம்மாவின் வாய் தாலாட்டுப் பாடுகிறது, நல் வார்த்தை கூறி மனத்தை மகிழச் செய்கிறது - அதுவேண்டும்போது அம்மாவின் வாயைத் துதிப்போம்.
    அம்மாவின் கண்கள் கருணையைப் பொழிகின்றன - கனிவு வேண்டும்போது அம்மாவின் கண்களைத் துதிப்போம்.
    அம்மாவின் காதுகள் நம் கஷ்டங்களைக் கேட்கின்றன - கஷ்டம் வரும்போது அம்மாவின் காதுகளைத் துதிப்போம்.
    அம்மாவின் மேனியாகிய மடி இளைப்பாற, உறங்க இதமாக இருக்கிறது - தேவைப்படும்போது அம்மாவின் மடியைத் துதிப்போம்.
    அம்மாவின் கால்கள் நம்மைச் சுமந்தபடி வேறிடத்திற்கு இட்டுச் செல்கின்றன - வேறிடம் செல்ல விரும்பினால் அம்மாவின் கால்களைத் துதிப்போம்.
    என அம்மாவின் பலவிதமான அங்கங்கள் நமக்குப் பலவிதமான உபயோகத்திற்கு பயன்படுகின்றன.
    அவை யாவும் அம்மாவின் அங்கங்கள்தான் என்று அறியாத வரை (அறியாதவர்கள்) அந்தந்த அங்கங்களைத் துதிக்கிறார்கள்.

    சரணாகதி அடைந்தவர்களுக்கு அம்மாவாகிய பரமாத்மாவை அடைவது ஒன்றுதான் இறுதியான குறிக்கோள்,
    அதனால் நம் தேவைகளுக்காக அம்மாவின் அங்கங்களைத் துதித்தால்தான் அவை ஈடேறும் என்ற அறியாமை நீங்கி,
    அம்மா நமக்குத் தேவையான நல்லவை அனைத்தையும் அந்தந்தக் காலத்தில் நாம் கேட்காமலே செய்வாள் என்ற ஜ்ஞானம் ஏற்பட்டுவிட்டால்,
    அம்மாவாகிய பரமாத்மாவின் மஹிமையை எண்ணி அவனிடம் பக்தி செலுத்துவதைத் தவிர அங்கங்களாகிய மற்ற தேவதைகளிடம்
    தானாகவே ஈடுபாடு அற்றுப்போகும் போகவேண்டும். அந்த ஜ்ஞானத்தையும் உரியகாலத்தில் அந்த அம்மாவாகிய பரமாத்மாதான் கொடுக்கவேண்டும்.

    எனவே, யாரையும் நீ இதர தேவதையைத் தொழாதே என்று சொல்வதேகூட தவறுதான்.

    அப்படியானால் குறிப்பிட்ட பயன்களை அடைய குறிப்பிட்ட தேவதைகளைத் தொழவேண்டும் என்று வேதத்திலும், புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ளதே
    என்ற கேள்விக்கு,
    பகவான் அர்சுனனிடம், பக்தி யோகம், கர்மயோகம், ஜ்ஞான யோகம் என பல உபாயங்களைச் சொல்லி கடைசியாக சரணாகதியை உபதேசிக்கிறார்.
    மற்ற யோகங்கள் அம்மாதான் எல்லாம் என்ற ஜ்ஞானத்தை ஏற்படுத்தவும், தற்காலிக ஹிதத்தைப் பெறுவதற்காகவும் ஏற்பட்டவை.
    எனவேதான் ஜ்ஞானம் ஏற்பட்ட பிறகுதான் சரணாகதி பண்ணிக்கொள்ளவேண்டும் என்று சொல்லப்படுகிறது.

    க்ருஷ்ணன் வேறு, ராமர் வேறு, நரசிம்மர் வேறு, ஹயக்ரீவர் வேறு என்று எண்ணுவது எந்த அளவிற்கு ஜ்ஞானம் உடைய செயலோ
    அதே போன்றதுதான், நவக்ரஹம் வேறு, கணபதி வேறு, ருத்ரன் வேறு, ப்ரஹ்மா வேறு, நாராயணன் வேறு என்று எண்ணுவதுமாகும்.

    தாஸன்,
    என்.வி.எஸ்

  • #2
    Re: Vaishnavas discourage worship of other gods like Siva. Durga, Murugan etc? Why?

    Well said. Prapanna or a person, who had surrenered unconditionally to Bagavan and taken refuge in his divine feet seeks shelter in none other than the Lord.

    Comment


    • #3
      Re: Vaishnavas discourage worship of other gods like Siva. Durga, Murugan etc? Why?

      மிகவும் அற்புதமான விளக்கம் மாமா! ரொம்ப நன்றி, இப்படி தெளிய வைத்ததற்கு

      Comment


      • #4
        Re: Vaishnavas discourage worship of other gods like Siva. Durga, Murugan etc? Why?

        No one could have given so explicit and unequivocal explanation on this subject. What you have underscored is very pertinent that once we surrender

        ourselves unconditionally to Lord Narayana, we should not get any other images .Which does not mean that one should not pray other Gods; if we look

        deep into the whole matter ultimately all Gods are nothing but Lord Narayana.The validity of truth will be perceptible with the passage of time.

        PC RAMABADRAN

        Comment


        • #5
          Re: Vaishnavas discourage worship of other gods like Siva. Durga, Murugan etc? Why?

          ஶ்ரீ:
          பலர் இதைப் பாராட்டியுள்ளீர்கள். நன்றி!
          இதில் கூட இன்னும் சிலருக்குக் குழப்பம் இருக்கும். அதற்காக ஒரு சிறு விளக்கம்.
          சிவன், ப்ரஹ்மா, சக்தி, கணபதி என்று ஒவ்வொரு தேவதையையும் பரமாத்மாவாக ஏற்றுக்கொண்டவர்கள் உள்ளனர்.
          அதிலும் தவறில்லை குழப்பமும் இல்லை.
          சிவன்தான் பரமாத்மா என்று கூறாமால் எது பரமாத்மாவோ அதுதான் சிவன் என்றும்.
          எது பரமாத்மாவோ அதுதான் நாராயணன் என்றும்,
          எது பரமாத்மாவேபா அதுதான் கணபதி என்றும்,
          எது பரமாத்மாவோ அதுதான் சக்தி என்றும் பார்க்கவேண்டும்.
          அப்படிப் பார்க்கும்போது பரமாத்மா - அவரவருக்குப் பிடித்த பரமாத்மாவாகவே இருக்கும்
          பரமாத்மாவின் பெயர் எதுவாக இருந்தால் என்ன?
          நமக்குப் பிடித்த பெயரில் நாம் கூறுவதற்காகத்தானே அந்த பரமாத்மாவுக்கு
          "ஸர்வ சப்த வாச்யன்" என்று ஒரு நிலைப்பாடு இருக்கிறது.
          "தொப்பிக்காரன்" என்றால் தொப்பி அணிந்துள்ள மனிதனையும், அந்த மனிதனின்
          சரீரத்தையும் கடந்து அவன் உள்ளிருக்கும் அவன் ஆத்மாவையும் எப்படி அந்த சப்தம் குறிக்குமோ,
          அதுபோல்
          அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாக அந்த பரமாத்மாவே இருப்பதால்
          எந்த சப்தமும் அந்த பரமாத்மாவையே குறிக்கும்.
          "அந்தர் பஹிச்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித:" என்று அனைத்தின்
          உள்ளும் புறமும் இருப்பது அந்த நாராயணன் என்றும்,
          "தத் விஷ்ணோ: பரமம் பதம்" என்று அனைத்திலும் உயர்வானதான பரமபதம் என்பது விஷ்ணுவின்
          பதம் என்று வேதம் பலவிடத்தும் கூறுவதால் வைஷ்ணவர்கள் நாராயணனைப் பரமாத்மா
          என்கிறார்கள்.
          பரமாத்மாவை நாம் ஸ்தாபிக்கவோ, நிரூபிக்கவோ தேவையில்லை,
          நாம் நிரூபிக்கமுடியாமல் போனாலும் பரமாத்மா பரமாத்மாவாகத்தான் இருப்பார்.
          "கஜேந்திரன் - ஆதிமூலமே" என்று அழைத்ததுபோல்
          அடியேன் "பரந்தாமா" என்று அழைக்கிறேன்.
          அதாவது - பரந்தாமமாகிய பரமபதத்துக்கு நாதன் - அவனுடைய பெயர் எதுவாக
          இருந்தால் நமக்கென்ன?
          மேலும், பரந்தாமனை - பரமபதநாதனை மனதில் எண்ணிக்கொண்டு,
          வாயினால் எந்தப்பெயரைச் சொன்னாலும் அது அந்த பரமாத்மாவைத்தான்
          குறிக்கும், துதிகள் சென்றடையும்.
          தாஸன்.
          என்.வி.எஸ்


          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment

          Working...
          X