Announcement

Collapse
No announcement yet.

மைசூர் பாகு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மைசூர் பாகு

    மைசூர் பாகு செய்ய பெண்கள் தயங்குவது ஏன்? ஆன்லைனில் அசத்தல் ஸ்நாக்ஸ்! (Sponsored)

    இனிப்பு பண்டங்கள் என்றாலே அனைவருக்கும் நாவிலே எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அதிலும் மைசூர் பாகு என்றால் சொல்லவா வேண்டும்?
    இந்த மைசூர் பாகு கர்நாடகாவில் உள்ள மைசூரை, மன்னர்கள் ஆண்ட காலத்தில் அரசரின் சமையல்காரர் செய்த ஒரு இனிப்பு பண்டம். பின்னாளில் இது நாடு முழுவதும் பரவி இன்று உலகம் முழுவதும் தயாரித்து ருசிக்கிறார்கள். இன்று எத்தனையோ இனிப்பு வகைகள் வந்தாலும் இதன் சுவைக்கு ஈடாகாது.
    மைசூர் பாகு என்ற பெயர் வரக்காரணம் என்ன?
    இது மைசூரில்தான் முதன்முதலில் உதயம் ஆனது. அதனால், இந்த ருசியான இனிப்பு பண்டத்தை மைசூர் என்ற பெயரைச் சேர்த்தே அழைக்கிறோம். சர்க்கரைப் பயன்படுத்தி செய்யப்படும் பாகு மூலம் தயாரிக்கப்பட்ட பண்டம் என்பதால், ஊர் பேரையும் இந்த பாகுவையும் சேர்த்து மைசூர் பாகு என்று பெயர் பெற்றது. இந்த மைசூர் பாகு உச்சரிப்பில் சிறிது மாற்றம் பெற்று, பலரால் மைசூர் பாக்கு என்றும் அழைக்கப்படுகிறது.


    ருசியான மைசூர் பாகு செய்வது எப்படி?
    மைசூர் பாகு செய்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. மற்ற இனிப்பு பண்டங்களைப்போல் நினைத்த உடன் செய்துவிட முடியாது என்பது இதை முயற்சித்தவர்களுக்குதான் தெரியும். ஏ ன் எனில், பாகு சரியான பதம் எடுத்தால் மட்டுமே அதன் ருசியை முழுவதுமாகப் பெற முடியும். பாகு பதம் வருவதற்குள் எடுத்துவிட்டால், மைசூர் பாகு அல்வா போல் இருக்கும். பாகு பதம் கூடி எடுத்து விட்டால், கல் போல் மாறிவிடும். உடைக்கக்கூட முடியாது. இதனால்தான் பலரும் இதை முயற்சிக்கக் கூட பயப்படுகிறார்கள்.
    மைசூர் பாகு செய்ய தேவையான பொருட்கள்:
    கடலை மாவு – 1 கப்
    நெய் – 1 1/4 கப்
    எண்ணெய் – 3/4 கப்
    சர்க்கரை – 2 கப்
    பால் - 1/4 கப்
    தண்ணீர் – 1 /4 கப்
    சமையல் சோடா - 1சிட்டிக
    செய்முற
    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு சூடு செய்துகொள்ள வேண்டும். பிறகு, கடாயை சூடுபடுத்தி, அதில் கடலை மாவைச் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை தீயவிடாமல் சிவக்க வறுக்க வேண்டும். பச்சை வாசனை சென்ற உடன் அடுப்பை நிறுத்தி விட்டு, அதில் நெய் மற்றும் எண்ணைய்யை சேர்த்து கலந்து இறக்கி வைக்கவும்.

    மீண்டும் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து நன்றாக சூடு செய்யவும். சர்க்கரை நன்கு கரைந்ததும் பாகு பதத்துக்கு வரும் வரை நன்றாக காய்ச்சி கலக்கவும். பாகு பதம் வந்ததும் இதோடு நாம் தயாரித்து வைத்த மாவைச் சேர்த்து கலக்க வேண்டும். நன்றாக மாவு கலந்ததும், சூடாக வைத்துள்ள எண்ணெய் நெய் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்க வேண்டும். கலவை கெட்டியானதும் ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி தேவையான அளவுகளில் துண்டுகளாக செய்து ருசிக்கவும்.
    இவ்வளவு ருசியான மைசூர் பாகை இதே தரத்திலும் ருசியிலும் தயாரித்து உங்கள் வீட்டுக்கே கொண்டுவந்து சேர்க்கிறது நேடிவ்கிரஷ்.காம் (www.nativcrush.com) என்ற இணையதளம், இதை படித்ததும் மைசூர் பாகு சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதுதானே? உடனே ஆர்டர்செய்யுங்கள்... வீட்டிலே குடும்பத்தோடு அமர்ந்து இனிப்பை சுவையுங்கள்.

    Source: Anandavikatan news.

  • #2
    Re: மைசூர் பாகு

    நல்ல பகிர்வு மாமா, அனால் எந்த லிங்கும் வேலை செய்யலை .....கொஞ்சம் பாருங்கோ மாமா
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    Working...
    X