Announcement

Collapse
No announcement yet.

யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA)....contnd..2

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA)....contnd..2

    continuation....

    இயந்திரம் தோற்று மனிதன் ஜெயிக்கும் ‘கேப்ட்சா’ தத்துவம்

    மார்டன் கம்ப்யூட்டர் நுணுக்கங்களின் தந்தை என்றழைக்கப்படும் ‘ஆலன் ட்ர்னிங்’ (Alen Turning) என்பவர் மனிதனும், கம்ப்யூட்டரும் ஒன்று போல செயல்பட முடியுமா, மனிதனைப் போல சிந்திக்க முடியுமா, செயல்பட முடியுமா என்பதை பரிசோதிக்க விரும்பினார். மனிதனையும், கம்ப்யூட்டரையும் வைத்து ஒரு சிறிய சோதனையை நடத்தினார். அதில் நடுவராக இருப்பவருக்கு எதிரில் இருக்கும் மனிதனும், கம்ப்யூட்டரும் கண்களுக்குத் தெரியாது. எது இயந்திரம், மனிதன் யார் என்பதும் தெரியாது. இருவரிடமும் கேள்விகள் கேட்கப்படும். இருவரிடம் இருந்து கிடைக்கின்ற பதிலில் மனிதன் சரியான பதிலை சொன்னானா அல்லது இயந்திரம் சரியான பதிலை சொன்னதா என்பது நடுவரால் கணிக்க முடியாத அளவுக்கு மனிதனும், இயந்திரமும் சரிநிகர் சமானமாக செயல்படுவர். இந்தப் பரிசோதனைக்கு Turning Test என்று பெயர்.

    கேப்ட்சாவில் பயன்படுத்தப்படும் தத்துவம், Turning Test என்ற பரிசோதனைக்கு எதிர்பதமாக செயல்படும். அதாவது கம்ப்யூட்டரே செய்கின்ற பரிசோதனையில் இயந்திரம் தோற்று மனிதன் ஜெயித்து ‘தான் மனிதன்’ என்பதை நிரூபிப்பதால் இதில் பயன்படுத்தப்படும் தத்துவத்துக்கு Anti Turning Test என்று பெயர்.
    அதிகம் பயன்படுத்தப்படும் ‘கேப்ட்சா’

    கேப்ட்சா’ என்ற பரிசோதனை விவரம் வெவ்வேறு வடிவங்களில், அளவுகளில் வடிவமைக்கப்பட்டிருக்கும். வெப்சைட்டின் உரிமையாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப இவற்றில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள். உதாரணத்துக்கு இங்கு அதிகம் பயன்பாட்டில் உள்ள கீழ்காணும் ‘கேப்ட்சா’ விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

    · The Standard Distorted Word CAPTCHA with an Audio Option
    · Picture Identification Captcha
    · Math Solving Captcha
    · 3D Captcha
    இந்த கேப்ட்சா எழுத்துக்களாலும், எண்களாலும் இமேஜ்களாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இதைப் பார்த்து நாம் டைப் செய்ய வேண்டும். அப்படி நாம் டைப் செய்கின்ற வார்த்தை கேப்ட்சா வார்த்தையோடு சரியாக இல்லை என்றாலோ அல்லது அந்த வார்த்தையைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்தாலோ, Recaptcha என்ற பட்டனை கிளிக் செய்தால் புதிதாக மற்றொரு கேப்ட்சா வார்த்தை கிடைக்கும்.

    பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் காதால் கேட்டு வார்த்தைகளை டைப் செய்வதற்காக ஸ்பீக்கர் ஐகான் இருக்கும். இதை கிளிக் செய்தால் கம்ப்யூட்டர் அந்த வார்த்தைகளை படித்துக் காட்டும். அதை கேட்டு டைப் செய்யலாம்.

    Picture Identification Captcha

    இந்த கேப்ட்சா, படங்களை வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    உதாரணத்துக்கு ஒரு படத்தைக் கொடுத்துவிட்டு, அதன் கீழ் பல படங்கள் வரிசைகட்டி கொடுக்கப்பட்டிருக்கும். இதை ஒத்த மற்ற படங்களை கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும் என்றோ அல்லது கொடுக்கப்பட்டுள்ள படங்களில் ஒருகுறிப்பிட்ட படத்தை மட்டும் செலக்ட் செய்யவும் என்றோ கேட்பார்கள்.

    இங்கு நாம் எடுத்துக்கொண்ட உதாரணத்தில் பூனையின் இமேஜை ஒத்த படங்களை செலக்ட் செய்யவும் என்று இருப்பதை கவனிக்கவும்.

    நீங்கள் பூனையின் படத்தை சரியாக செலக்ட் செய்து வெரிஃபை பட்டனை கிளிக் செய்தால் மட்டுமே உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் ஒரு மனிதன் என்பதை உறுதிசெய்துகொண்டு உங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கும்.

    இல்லையேல் நீங்கள் கதவைத் தட்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!



    Source: Thanks to செய்திகள்
    தகவல் தொழில்நுட்ப/ Anandavikadan
Working...
X