Announcement

Collapse
No announcement yet.

புதிய தீவு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • புதிய தீவு

    எரிமலை வெடிப்பால் ஜப்பான் அருகே புதிய தீவு உதயம்.
    பசிபிக் பெருங்கடலில் உள்ள எரிமலையிலிருந்து வெளியேறிய குழம்புகளால் ஜப்பான் அருகே குட்டித் தீவு புதிதாக உருவாகியுள்ளது.
    இந்த சிறுதீவு 660 அடி சுற்றளவு கொண்டது. போனின் தீவுகள் என அழைக்கப்படும் ஆளில்லாத் தீவு அருகே இந்த புதிய தீவு உருவாகியுள்ளது என ஜப்பான் வானியல் ஆய்வு மையம் தெரிவிதுள்ளது.
    டோக்கியோவிலிருந்து தென் திசையில் 1,000 கி.மீ. தொலைவுக்கு அப்பால் 30 சிறு தீவுகள் உள்ளன. இவை, பசிபிக் நெருப்பு வளையம் பகுதியில் எரிமலை வெடிப்புகளால் உருவானவை. எரிமலை தொடர்ந்து குழம்பை வெளியேற்றி வருவதால் அப்பகுதியில் அடர்கரும்புகை, சாம்பலுடன் வெளியேறியபடி உள்ளது.
    கடந்த 1970ஆம் ஆண்டுகளின் மத்தியில் இப்பகுதியில் உள்ள எரிமலைகள் குமுறத் தொடங்கின. அதற்குப் பிறகு தற்போதுதான் எரிமலகள் லேசாக குமுறி வருகின்றன.
    ஜப்பான் அரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், " எவ்வளவு சிறிய தீவாக இருந்தாலும், அது ஜப்பானின் ஆட்சிப் பரப்புக்குள் வருவது வரவேற்கத்தக்கது. இது போன்று ஏற்கனவே பல தீவுகள் உருவானதும், காணாமல் போனதும் நிகழ்ந்துள்ளது" என்றார்.
    -- பி.டி.ஐ. சர்வதேசம்.
    --- ' தி இந்து' நாளிதழ். வெள்ளி,நவம்பர் 22, 2013.
Working...
X