Announcement

Collapse
No announcement yet.

Sin

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sin

    Courtesy:Sri.GS.Dattatreyan


    எதெல்லாம் பாவம் என்று வள்ளல் பெருமான் மனுமுறை கண்ட வாசகத்தில் குறிப்பிடுகிறார் என்று பார்ப்போம்.
    1. நல்லோர் மனதை நடுங்கச் செய்வது.
    2. வலிய வழக்கிட்டு மானங் கெடுப்பது.
    3. தானம் கொடுப்போரை தடுத்து நிற்பது.
    4. கலந்த சினேகிதரைக் கலகஞ் செய்வது.
    5. மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்வது.
    6. குடிவரி உயர்த்திக் கொள்ளை கொள்வது.
    7. ஏழைகள் வயிறு எரியச் செய்வது.
    8. தர்மம் பாராது தண்டஞ் செய்வது.
    9. மண்ணோரம் பேசி வாழ்வழிப்பது.(தன் நிலத்திற்கு அருகில் உள்ள பிறர் நிலத்தை அபகரித்தல்)
    10. உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்வது.
    11. களவு செய்வோர்க்கு உளவு சொல்வது.
    12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
    13. ஆசை காட்டி மோசஞ் செய்வது.
    14. வரவுபோக் கொழிய வழியடைப்பது.
    15. வேலையிட்டுக் கூலி குறைப்பது.
    16. பசித்தோர் முகத்தைப் பாராதிருப்பது.
    17. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்பது.
    18. கோள் சொல்லி குடும்பங் கலைப்பது.
    19. நட்டாற்றில் கையை நழுவ விடுவது.
    20. கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுப்பது.
    21. கற்பழிந்தவளைக் கலந்திருப்பது.(கற்பு என்பதை மனம் சார்ந்த விஷயம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.)
    22. காவல் கொண்டிருந்த கன்னியை அழிப்பது.
    23. கணவன் வழி நிற்போரைக் கற்பழிப்பது.
    24. கருப்பமழித்துக் களித்திருப்பது.
    25. குருவை வணங்கக் கூசி நிற்பது.
    26. குருவின் காணிக்கை கொடுக்க மறப்பது.
    27. கற்றவர் தம்மைக் கடுகடுப்பது.
    28. பெரியோர் பாட்டிற் பிழை சொல்வது.
    29. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
    30. கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைப்பது.
    31. ஊன் சுவை உண்டு உயிர் வளர்ப்பது.
    32. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
    33. அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்வது.
    34. குடிக்கின்ற நீருள்ள குளந்தூர்ப்பது.
    35. வெயிலுக்கொதுங்கும் விருட்சமழிப்பது.
    36. பகை கொண்டு அயலார் பயிர் அழிப்பது.
    37. பொது மண்டபத்தைப் போயிடிப்பது.
    38. ஆலயக் கதவை அடைத்தே வைப்பது.
    39. சிவனடியாரைச் சீறி வைப்பது.
    40. தவஞ் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
    41. சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்வது.
    42. தந்தைதாய் மொழியைத் தள்ளி நடப்பது.
    43. தெய்வமிகழ்ந்து செருக்கடைவது.
    என்று பாவங்களைப் பட்டியலிடுகிறார். படித்துப் பார்த்தால் பெரும்பாலான பாவங்களை நாம் செய்திருக்கிறோம் என்பது புலப்படும்.
    இதை சொல்ல வேண்டிய அவசியம் என்னவென்றால், இதற்கு முன்னால் போனது போகட்டும். இனிமேலும் இது போன்ற பாவங்களைச் செய்யாமல் வாழும் வாழ்வைத் தா என்று இறையாற்றலிடம் வேண்டிக் கொள்வதற்குத்தான்.
    ஏனென்றால் வேண்டுதல் என்பதே நமக்கு நாமே செய்து கொள்ளும் ஒரு சங்கல்பம் தான்.
Working...
X