Courtesy:Sri.GS.Dattatreyan
1.ச்ருதி ஸ்ம்ருதி புராணோக்த தர்மமார்கரதம் குரும் பக்தாநாம் ஹிதவக்தாரம் நமஸ்யே சித்தசுத்தயே
வேதங்கள் ஸ்மிருதிகளில் கூறப்பட்ட அனைத்து தர்மங்களையும் அனுஷ்டித்துக்காட்டி ஈடுபடுபவரும்,உலகின் குருவாக விளங்குபவரும் பக்தர்களுக்கு நன்மையைப் புகட்டுபவருமான குருவை மனம் சுத்தமாவதற்கு வணங்குவேன்.
2.அத்வைதானந்தபரிதம் ஸாதூநாமுபகாரிணம் ஸர்வ சாஸ்திரவிதம் சாந்தம் நமஸ்யே சித்தசுத்தயே
அத்வைத நிலையின் பேரானந்தத்தினால் திளைத்துள்ளவரும் நல்லோர்களுக்கு விருப்பத்தை நிறைவேற்றுபவரும் எல்லா சாஸ்திரங்களையும் அறிந்தவரும் அமைதியே வடிவானவரும் ஆன குருவை மனம் சுத்தமாவதற்கு வணங்குவேன்.
3.கர்ம பக்தி ஞானமார்க ப்ரசாரே பத்தகங்கணம் அனுக்ரஹப்ரதாதாரம் நமஸ்யே சித்தசுத்தயே
கர்மா பக்தி ஞானம் என்ற மூன்று வழிகளையும், (நடந்து காட்டி), மற்றவர்க்குப் பிரசாரம் செய்வதில் முனைந்துள்ளவரும், எப்போதும் யாவர்க்கும் அனுக்ரஹம் பண்ணுபவரும்(பார்வை,புன்முறுவல்,பேச்சுகளால்) ஆன குருவை மனம் சுத்தமாவதற்கு வணங்குவேன்.
4.பகவத்பாதபாதாப்ஜவிநிவேசிதசேதஸ ஸ்ரீ சந்த்ரசேகரகுரோ ப்ரஸாதோ மயி ஜாயதாம்
ஆதிசங்கரரின் பாதகமலங்களில் ஈடுபட்ட மனதை உடையவரான ஸ்ரீ சந்த்ரசேகர குருவின் கருணை கடாட்சம் என்னிடம் உண்டாகட்டும்
5.சேத்ர தீர்த்தகதாபிக்ஞ ஸச்சிதானந்தவிக்ரஹ சந்திரசேகரவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி
ஒவ்வொரு புனிதஸ்தலம்,தீர்த்தம் முதலியவற்றின் உண்மைக் கதைகளை அறிந்தவரும், ஸச்சிதானந்தவடிவமானவரும் ஆன ஸ்ரீ சந்திரசேகரரான சிறந்த குரு எப்பொழுதும் என் மனதில் வசிக்கட்டும்
6.போஷணே வேத சாஸ்த்ராணாம் தத்தசித்தமஹர்நிசம் சேத்ரயாத்ராரதம் வந்தே ஸத்குரும் சந்திரசேகரம்
வேதசாஸ்திரங்களை நன்கு வளரச்செய்யும் கார்யத்தில் அல்லும் பகலும் மனதைச் செலுத்தி ஆலோசிப்பவரும் ( பல திட்டங்களை உருவாக்கியவரும் ) பற்பல புண்ணிய சேத்திரங்களுக்கு பாத யாத்திரை செய்வதில் ஈடுபட்டவரும் (உண்மையில் சேத்ரங்களுக்கே பெருமை ஏற்படுமாறு விஜயயாத்திரை அமைகிறது ) ஆன ஸத்குரு ஸ்ரீ சந்திர சேகரரை வணங்குகிறேன்
7.வேதக்ஞான் வேதபாஷ்யக்ஞான் கர்த்தும் யஸ்ய ஸமுத்யம் குருர்யஸ்ய மஹாதேவ தம் வந்தே சந்திரசேகரம்
தகுதியுள்ளவர்களை வேதம் கற்றவர்களாயும் வேதம் கற்றவர்களை வேதப்பொருளை அறிந்தவர்களாகவும் ஆக்கும் பணியில் முயற்சியுடையவரும் ஸ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதியை குருவாக உடையவரும் ஆன சந்திரசேகரரை வணங்குகிறேன்
8.மணிவாசக கோதாதி பக்தி வாகம்ருதைர்ப்ருசம் பாலானாம் பகவத்பக்திம் வர்த்தயந்தம் குரும் பஜே
மாணிக்கவாசகர் ஆண்டாள் முதலியோரின் பக்தி ததும்பும் பாட்டுகளைப் பரப்புவதன் மூலம், குழந்தைகளுக்கு கடவுள் பக்தியை வளர்பவரான குருவை ஸேவிக்கிறேன்
9.லகூயதேசைர் நாஸ்திக்யபாவமர்த்தனகோவிதம்
சிவம் ஸ்மிதமுகம் சாந்தம் ப்ரணதோஸ்மி ஜகத்குரும்
எளிய யாவர்க்கும் மனதில் பதியுமாறு தெளிவான தன் தெய்வீகக் குரலின் ( பேச்சுகளால் ) உபதேசங்களால் நாஸ்திக்ய எண்ணங்களை அடியோடு அகற்றும் விஷயத்தில் நிகரற்றவரும் புன்னகை பூத்த முகத்தினால் மங்களங்களை அளிப்பவரும் சாந்திவடிவெடுத்தவருமான ஜகத்குருவை வணங்குகிறேன்
10.விநயேந ப்ரார்த்தயேஸ்ஹம் வித்யாம் போதய மே குரோ
மார்கமன்யம் த ஜானேஸ்ஹம் பவந்தம் சரணம் கத
ஒ குருவே நான் எனக்குக் கல்வியை ( ஆத்ம ஞானத்தை ) போதிக்க வேண்டும் என்று வணக்கத்துடன் வேண்டுகிறேன் எனக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை உம்மையே சரணம் அடைந்துள்ளேன்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends