Announcement

Collapse
No announcement yet.

டெங்கு காய்ச்சலுக்கு இனிப்பான மருந்து: த

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • டெங்கு காய்ச்சலுக்கு இனிப்பான மருந்து: த

    சென்னை: தமிழகத்தில் பரவியுள்ள டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும், நோயால் பாதித்தவர்களைக் குணப்படுத்தவும் இனிப்பான சித்த மருந்தான ஆடாதொடை மணப்பாகு வழங்கிட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதை அனைத்து அரசு சித்த மருத்துவமனைகள், மருந்தகங்களில் இருப்பு வைக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    தொற்று நோய்கள் பரவும் மழைக்காலத்தில் தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்புக் குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகள் மருந்துகள் ஏற்கனவே இலவசமாக வழங்கப்படுகின்றன.

    இந்த நிலையில், வட கிழக்குப் பருவ மழையால், வைரஸ் காய்ச்சல், டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் நாள்தோறும் மருத்துவமனைகளில் புதிய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

    இதனையடுத்து திமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
    புதியதாக வழங்கப்படவுள்ள இந்த ஆடாதொடை மணப்பாகு, உடலின் உள் உறுப்புகளில் நிகழும் ரத்த கசிவுக்கும் ஏற்றது. நிலவேம்புக் குடிநீர் இயற்கையாகவே கசப்புத்தன்மை வாய்ந்தது. அதானால் குழந்தைகளுக்கு அதை புகட்டுவது பெற்றோர்களுக்கு சிரமமாக இருந்தது. எனவே, எளிதில் பருகும்படியான மருந்தை அறிமுகப்படுத்த அரசு சித்த மருத்துவர்களுடன் தீவிரமாக ஆலோசித்தது.

    இதில், "ஆடாதொடை மணப்பாகு" எனும் இனிப்பு மருந்தை வழங்கலாம் என்று தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

    சளி, காய்ச்சல் பாதிப்புகளுக்கும், டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் தீவிரமடைந்தால் உள்உறுப்புகளில் ஏற்படும் ரத்தக் கசிவுக்கும் இந்த மருந்து வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து, இந்த மருந்தை அதிக அளவில் அனைத்து அரசு சித்த மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் இருப்பு வைக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து சித்த மருத்துவர்கள் சிலர் கூறுகையில், "5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆடாதொடை மணப்பாகில் 2.5 - 5 மி.லி வரை எடுத்து, அதனை 10 மி.லி. நிலவேம்புக் குடிநீருடன் கலந்து கொடுக்க வேண்டும். இதை குழந்தைகள் எளிதில் பருகுவர். சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படியே மருந்தைப் பருக வேண்டும்" என்று தெரிவித்தனர்.

    Source: Vikatan
Working...
X