Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம்

    தேவி பாகவதம் முன்னுரை
    தேவி பாகவதத்தை இயற்றியவர் முனிவர் வேத வியாசர்.
    தேவி பாகவததைக் முதலில் கேட்டவன் ஜனமேஜயன்.
    முனிவரின் சாபத்துக்கு ஆளான பரீக்ஷித் மன்னன்
    பணி தீண்டி அடைந்தான் அகாலமாக துர்மரணம்.
    துர் மரணத்தின் தீவினைகளை நீக்கிட அவன் மகன்
    சிரவணம் செய்தான் தேவி பாகவதத்தை முதன் முதலில்.
    ஒன்பது நாட்களில் கூறினார் தேவி பாகவதத்தை வியாசர்.
    ஒன்பது நாட்களின் முடிவில் பரீக்ஷித் அடைந்தான் முக்தி.
    “புத் என்னும் நரகத்தில் இருந்து என்னை மீட்டுக் காத்த
    சத் புத்திரன் நீயே!” என்று பரீக்ஷித் பாராட்டினான் மகனை.
    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
    தேவி பாகவத மகாத்மியம்
    சக்தி
    உலகம், உயிர்கள், இறைவன் இவற்றில்
    ஊடுருவியுள்ள ஆற்றல் தான் பராசக்தி.
    எல்லாம் செய்ய வல்லவள் பராசக்தி.
    எங்கும் நிறைந்திருப்பவள் பராசக்தி.
    முத் தொழிலுக்கும் தேவதை பராசக்தி
    அத்தனைக்கும் மூல காரணம் பராசக்தி.
    பெண் வடிவில் இருந்து உலகினைப்
    பேணுவதும் பராசக்தியின் அம்சமே.
    பெண் இல்லையென்றால் இல்லை பிறவி.
    பெண் இல்லை என்றால் இல்லை குடும்பம்.
    பெண் இல்லை என்றால் இல்லை ஒரு நாடு.
    பெண் இல்லை என்றால் இல்லை உலகம்
    பெண்மையின் ஆற்றலே சக்தி
    ஆண்மையின் ஆற்றலும் சக்தியே.
    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
    சக்தி திருப்புகழ்
    சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தி சக்தி என்றோது,
    சக்திசக்தி சக்தீ என்பார் – சாகார் என்றே நின்றோது.
    சக்திசக்தி என்றே வாழ்தல் – சால்பாம் நம்மைச் சார்ந்தீரே!
    சக்திசக்தி என்றீ ராகில் – சாகா உண்மை சேர்ந்தீரே!
    சக்திசக்தி என்றால் சக்தி – தானே சேரும் கண்டீரே!
    சக்திசக்தி என்றால் வெற்றி – தானே நேரும் கண்டீரே!
    சக்திசக்தி என்றே செய்தால் – தானே செய்கை நேராகும்,
    சக்திசக்தி என்றால் அஃது – தானே முத்தி வேராகும்.
    சக்திசக்தி சக்தீ சக்தீ என்றே ஆடோமோ?
    சக்திசக்தி சக்தீ யென்றே – தாளங்கொட்டிப் பாடோமோ?
    சக்திசக்தி என்றால் துன்பம் – தானே தீரும் கண்டீரே!
    சக்திசக்தி என்றால் இன்பம் – தானே சேரும் கண்டீரே!
    சக்திசக்தி என்றால் செல்வம் – தானே ஊறும் கண்டீரோ?
    சக்திசக்தி என்றால் கல்வி – தானே தேறும் கண்டீரோ?
    சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ!
    சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ!
    சக்திசக்தி வாழீ என்றால் சம்பத் தெல்லாம் நேராகும்,
    சக்திசக்தி என்றால் சக்தி தாசன் என்றே பேராகும்.
    மஹாகவி சுப்ரமணிய பாரதியார்
    அகவல்
    போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்!
    மாற்றுவாய், துடைப்பாய், வளர்ப்பாய், காப்பாய்!
    கனியிலே சுவையும், காற்றிலே இயக்கமும்
    கலந்தாற் போலநீ, அனைத்திலும் கலந்தாய்,
    உலகெலாந் தானாய் ஒளிர்வாய், போற்றி!
    அன்னை போற்றி! அமுதமே போற்றி!
    புதியதிற் புதுமையாய், முதியதில் முதுமையாய்
    உயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய்,
    உண்டெனும் பொருளில் உண்மையாய் என்னுளே
    நானெனும் பொருளாய் நானையே பெருக்கித்
    தானென மாற்றுஞ் சாகாச் சுடராய்,
    கவலைநோய் தீர்க்கும் மருந்தின் கடலாய்,
    பிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய்,
    யானென தின்றி யிருக்குநல் யோகியர்
    ஞானமா மகுட நடுத்திகழ் மணியாய்,
    செய்கையாய் ஊக்கமாய், சித்தமாய் அறிவாய்
    நின்றிடும் தாயே, நித்தமும் போற்றி!
    இன்பங் கேட்டேன், ஈவாய் போற்றி!
    துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
    அமுதங் கேட்டேன், அளிப்பாய் போற்றி!
    சக்தி, போற்றி! தாயே, போற்றி!
    முக்தி, போற்றி! மோனமே, போற்றி!
    சாவினை வேண்டேன், தவிர்ப்பாய் போற்றி!
    மஹாகவி சுப்ரமணிய பாரதியார்
    Cont'd
Working...
X