Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்

    தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்
    1#1a. கதை விருந்து (1)
    “கற்றறிந்த பேரரிஞரே! சூத மகாமுனிவரே!
    கற்றுள்ளீர் நேரடியாக வேத வியாசரிடம்!
    புனிதத் தலமாகிய நைமிசாரண்யம் வந்தது
    புண்ணிய பலன்களை எமக்குத் தருவதற்கு.
    மனோஹரமானது இந்த வனம்; உத்தமமானது;
    மாற்றிவிடும் கலி தோஷங்களை இந்த வனம்;
    முனிவர்கள் யாம் வேண்டுகிறோம் உம்மை;
    இனிக்கும் புராணங்களை எடுத்து இயம்பிட!
    அறுசுவை உணவை விரும்புகிறான் மனிதன்;
    அறிய விரும்பவில்லை அரிய புராணங்களை!
    செவி இல்லாத சர்ப்பம் உணரும் இடியோசை.
    செவி இருந்தும் தேவையில்லை செவிச்சுவை.
    தருகின்றது நல்ல நூல் அறிவுக்கு உணவு.
    தருகின்றது நல்ல சொல் செவிக்கு உணவு.
    கலிக்கு அஞ்சித் தங்கி உள்ளோம் இங்கு!
    கலியை வெல்லும் புராணம் கூறுவீர் நீர்!
    பிறந்தவர்கள் அனைவரும் கழிக்க வேண்டும்
    பிறவியில் விதிக்கப்பட்ட காலக் கெடுவினை.
    காமம், தூக்கம், சோம்பல், அகந்தை மேலும்
    மோசம், சூது, வேட்டை, கேளிக்கை என்றே
    வீணடிக்கிறார்கள் பொழுதை அறிவிலி மனிதர்!
    விரயம் செய்யும் காலத்தை உணருவதில்லை!”


    1#1b. கதை விருந்து (2)
    முனிவர் தொடர்ந்தனர் தம் வேண்டுகோளை,
    கனிவுடன் கவனித்து வந்த சூத முனிவரிடம்.
    “மெத்தப் படித்தவர்கள் கழிக்கின்றனர் காலத்தை
    தத்துவ விசாரத்தில், ஆராய்ச்சியில், சிந்தனையில்.
    சாத்திரங்கள் பலவகையில் வேறுபட்டு நிற்பவை.
    சாத்வீக குண சாத்திரங்கள் வேதாந்தம் எனப்படும்.
    ராஜச குண சாத்திரங்கள் மீமாம்சம் எனப்படும்;
    தாமச குண சாத்திரங்கள் தர்க்கம் எனப்படும்.
    புராணங்கள் முக்குணம் உடையவை – மேலும்
    புராணங்கள் ஐந்திலக்கணம் கொண்டவை ஆம்.
    பாகவதம் சமம் ஆகும் நான்கு வேதங்களுக்கு.
    பாகவதம் பெயர் பெற்றது ஐந்தாம் வேதம் என.
    முக்தி தரவல்லது முத்தியை விழைவோருக்கு!
    சித்திக்கும் போகங்கள் அதை விழைவோருக்கு!
    அமிர்தம் நிகர்த்த பாகவதம் கூறவேண்டும்.
    அமிர்தம் நீக்கும் நரை, திரை, மூப்பு இவற்றை.
    அமிர்தம் தராது ஜீவன் முத்தியை நமக்கு!
    அமிர்தம் ஒழிக்காது இப்பிறவிப் பிணியை!
    பாகவதம் ஒழிக்கும் நம் உடல் தளைகளை.
    பாகவதம் ஒழிக்கும் சம்சாரச் சக்கரத்தை.
    யாக, யக்ஞங்கள் தரவில்லை மன சாந்தியை!
    யாக யக்ஞங்கள் தரவில்லை ஜீவன் முக்தியை!
    சுவர்க்க போகத்தில் முடியும் மனிதப் பிறவி!
    சுவர்க்க போகம் முடியும் மனிதப் பிறவியில்!
    சுழற்சியே ஆகிவிட்டது மனித வாழ்க்கையாக!
    சுழற்சியில் இருந்து வர வேண்டும் வெளியே.
    முக்தி தரும் பாகவதத்தைக் கூறியருளுவீர்!
    சித்திக்கும் ஜீவன் முக்தி அதனால் எமக்கு!”


    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
Working...
X