Announcement

Collapse
No announcement yet.

வெண்டைக்காய் சூப்.. செய்வது எப்படி??

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வெண்டைக்காய் சூப்.. செய்வது எப்படி??

    தேவையானவை: வெண்டைக்காய் - 5 (பொடியாக நறுக்கவும்), தக்காளி, பெரிய வெங்காயம் - தலா ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, காராபூந்தி - சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு நீர் - 2 கப் (பருப்பை வேகவைத்து வடித்த நீர்), சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
    செய்முறை: வெண்டைக்காயை நறுக்கி, வெறும் கடாயில் வதக்கவும் (காயில் உள்ள வழவழப்பு நீங்கும்). வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளியை வதக்கி, வெண்டைக்காயை சேர்க்கவும். இத னுடன் பருப்பு நீர், மஞ்சள்தூள் சேர்த்து, கொதி வந்ததும் உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, எலு மிச்சைச் சாறு சேர்க்கவும். பரிமாறும் போது மல்லித்தழை தூவவும். மேலும் சுவைகூட்ட, சூப்பை கப்பில் ஊற்றும்போது மேலே காராபூந்தி தூவலாம்.
    ‪#‎அவள்விகடன்‬
Working...
X