Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்

    1#5b. ஹயக்ரீவன் (2)
    அந்தகாரம் நீங்கி விட்டது சற்று நேரத்தில்;
    அந்தோ இருந்தது சிரமற்றுச் சிதைந்த உடல்!
    கபந்தத்தைக் கண்டு ஓலமிட்டனர் தேவர்கள்;
    “அபயம் அளிக்கும் பெருமானுக்கு அபாயமா?
    அழிவே இல்லாதவனுக்கு அழிவு ஏற்பட்டதே?
    அழிக்க முடியாத ஒருவனை அழித்தது எது?
    எங்கள் கதி என்ன ஆகுமே இனிமேல் அறியோம்!
    எங்களாலேயே விளைந்தது இந்தக் கொடுமை!”
    ஆறுதல் கூறினார் தேவகுரு பிருஹஸ்பதி.
    “அழுவதும், அரற்றுவதும் பயன் தர மாட்டா!
    தெய்வப் பிரயத்தனத்துடன் நம் பிரயத்தனம்
    செய்யும் அனைத்தும் நிகழ்வது இவற்றால்!
    நமது முயற்சிக்கு வெற்றியை அளித்திடும்
    நமது முயற்சியுடன் கூடிய தெய்வ முயற்சி.
    தெய்வ சங்கல்பமின்றி நிகழ்ந்து விடாது ஏதும்!
    தெய்வ சங்கல்பமே முயற்சியும் அதன் பலனும் ”
    மறுத்தான் தேவகுருவின் கருத்தை ஏற்பதற்கு;
    மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்த இந்திரன்!
    “உறக்கம் கலைவதற்கு செய்தோம் முயற்சி;
    பறந்து சென்று விட்டது விஷ்ணுவின் தலை!
    நம் முயற்சி, தெய்வ முயற்சி, இவை இரண்டும்
    தம்மில் வேறுபடாமல் நேருமா இக் கொடுமை?”


    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
Working...
X