Announcement

Collapse
No announcement yet.

Vishnu in Tiruppugazh

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vishnu in Tiruppugazh

    1. திருப்புகழ்–6 (முதலில் பாடப்பட்டது)-திருவண்ணாமலை
    "முத்தைத் தரு பத்தித் திருநகை" என்ற பாடல்தான் முதலில் பாடப்பட்டது. பாடப்பட்ட இடம் திருவண்ணாமலை கோயில்.
    திருப்புகழ் பாடு என்று முருகன் பணித்த பின் "என்ன பாடுவது? எப்படிப் பாடுவது?" என்று புரியாமல் தவித்த அருணகிரிக்கு, "முத்து முத்தாகப் பாடு" என்று முருகனே எடுத்துக் கொடுக்க பாடப்பட்டதுதான் "முத்தைத் தருபத்தித் திருநகை" என்ற திருப்புகழ்.
    முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண
    முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும்
    ——————————–
    ——————————–
    பத்து தலை தத்த கணை தொடு
    ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு
    பட்ட பகல் வட்ட திகிரியில் இரவாக
    பத்தற்கு இரதத்தை கடவிய
    பச்சை புயல் மெச்ச தகு பொருள்
    பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே!
    ——————————–
    ——————————–
    கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை
    வெட்டி பலி இட்டு குலகிரி
    குத்துப்பட ஒத்து பொர வ(ல்)ல பெருமாளே
     பத்துத் தலை தத்தக் கணைதொடு
    இராவணனுடைய பத்துத் தலைகளைச் சிதறும்படி அம்பைச்செலுத்தியவரும்,
     ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
    மந்தர மலையை மத்தாக கொண்டு கடலைக் கடைந்தவரும்,
     பட்டப் பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
    பட்டப் பகலைத் தனது வட்டச் சக்கரத்தால் இரவாக்கியவரும்,
     பக்த்தற்கு ரதத்தைக் கடவிய
    தன் பக்தனாகிய அருச்சனனுடைய தேரைச் ஓட்டியவரும்
     பச்சைப் புயல்
    பச்சை நிறமுடைய திருமால்
     மெச்சத் தகு பொருள்
    போற்றத்தகு பரம்பொருள் (முருகன்)
     பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே!
Working...
X