Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் cont'd

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் cont'd

    1#5c. ஹயக்ரீவன் (3)
    பிரமன் குறுக்கிட்டுக் கூறலுற்றான் – ஒரு
    பிரமிக்க வைக்கும் காலத் தத்துவத்தை.
    “தோன்றுகின்றன காலத்தால் செயல்கள்;
    தோன்றுகின்றன செயல்களால் பலன்கள்.
    அனுபவிக்க வேண்டும் வினைப்பயன்களை;
    அணுவளவும் அதிலிருந்து தப்பவே முடியாது.
    அகந்தை அடைந்தேன் நான் காலவசத்தால்;
    அகந்தை அகன்றது ஒரு தலையை இழந்ததும் .
    சந்திரன் க்ஷயரோகி ஆனான் சாபத்தால்;
    இந்திரன் பெற்றான் ஆயிரம் யோனிகள்;
    ஒளிந்திருந்தான் பிரம்மஹத்தியை அடைந்து,
    வெள்ள நீரில் தாமரைத் தண்டினில் மறைந்து!
    விஷ்ணுவின் தலை விழுந்தது உப்புக் கடலில்
    விபரீதச் செயல்களும் தெய்வச் செயல்களே!
    மகாமாயை, வித்யா ஸ்வரூபிணி என்றும்
    மகாதேவி, சனாதனி, சக்தி தேவி என்றும்
    நாராயணியைத் தியானம் செய்வோம் நாம்
    பாராமுகம் கொள்ளது உதவுவாள் தேவி.
    பிரமன் கூறியதை ஏற்றனர் தேவர்கள்
    பிரமாதமாகத் தேவியைத் துதித்தனர்.
    வேதங்கள் வந்தனன் தேக உருவெடுத்து
    வேத புருஷர்கள் துதித்தனர் தேவியை.


    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
Working...
X