வீட்டில் எள்ளு தீபம் ஏற்ற வேண்டாம்! அதாவது நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற வேண்டாம் ! சங்கு சிப்பி போன்ற சமுத்திரப் பொருட்களையும் பூஜை அறையில் வைத்து தொட்டு வணங்க வேண்டாம் ! சங்கை வீட்டில் வைத்திருப்பதால் பலவிதமான பிரச்சனைகள் வரும் வாய்ப்பு உள்ளது. சிப்பிகள் சைத்தானின் கைப்பாவை இவைகள் வீட்டில் இருந்தால் தீய சக்திகள் வீட்டுக்குளே தங்கிக்கொள்ளும். செழிப்பான வாழ்வு பழிப்பான வாழ்வாய் மாறும். தோரணங்களாகக் கூட வீட்டில் சிப்பிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.!
வீட்டில் எள்ளு தீபத்தை அல்லது எள் எண்ணையைத்தான் பெரும்பாலான பக்த்தர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதை பயன்படுத்துவதை தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக விநாயகருக்கும், சிவபெருமானுக்கும் எள் எண்ணெய் என்ற நல்லெண்ணெய் வேண்டாம். நல்லெண்ணையில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய்,நெய் போன்ற பிற எண்ணெய்களைக் கலந்து வீட்டில் விளக்கேற்றலாம். மேலும் இஷ்ட தெய்வத்துக்குரிய வெள்ளி, செவ்வாய், ஞாயி்று ஆகிய கிழமைகளில் நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். சிரார்த்த காரியங்களில் நல்லெண்ணையை தாராளமாகப் பயன்படுத்தலாம்.
தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும்,
குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு-2 அம்மனை நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.
விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர்
மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.
காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில தீபம் ஏற்ற வேண்டும்.. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை தீயசக்திகள் தொந்தரவுகள் அண்டாது. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது.
தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம்.
தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.*
Sasi Rama
Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends