Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்

    1#5d. ஹயக்ரீவன் (4)
    “மஹேஸ்வரி! மஹாமாயே! மஹாசக்தியே!
    மஹேஸ்வரனின் பிரிய சகியே! சிவகாமியே!
    ஆதாரம் நீயே அனைத்து உயிர்களுக்கும்!
    ஆதாரம் கொண்டன நவசக்திகள் உன்னிடம்.
    அக்ஷர சங்க்கியையில் அனைத்தும் நீயே!
    ரக்ஷித்து உயிர்களைக் காப்பவளும் நீயே!
    ஜகத்காரணி, பரிபூரணி, கருணா ரஸமயி நீ!
    ஜகத் ஜனனி, துக்க நிவாரணி, மந்தர ரூபிணி.
    தாவர ஜங்கமங்களின் ஒரே தாய் நீயே!
    தொழும் தேவர்களின் தலைவியும் நீயே!
    அனைத்தும் செய்ய வல்லவள் நீயே!
    அனைத்திலும் புகுந்து உறைபவள் நீயே,
    மாறாத இளமையுடன் இருப்பவள் நீயே
    கூற இயலாது உன் பெருமைகலை தேவி!
    ஆசையற்றவள் நீ! ஆதி காரணம் நீ!
    அசையாது ஓரணுவும் நீ அறியாது!
    அறிவாய் நீ விஷ்ணுவின் சிரம் பறந்ததை.
    அறிவாய் நீ விஷ்ணு உன் பக்தன் என்பதை.
    சம்மதமா உனக்கு விஷ்ணுவின் சிரச்சேதம்?
    சம்மதமா உனக்கு லக்ஷ்மியின் அலங்கோலம்?
    போரில் வென்ற அகங்காரத்தால் விளைந்ததோ
    கோரமான இந்தச் சிரச்சேதம் விஷ்ணுவுக்கு?
    அலைமகள் மீது கோபம் கொண்டாயோ?
    அலை மகள் உன் அம்சம் அல்லவா தேவி?
    அமிர்தம் தேவரை அமரர் ஆக்குவது போல
    ஆற்றல் கொண்டவள் நீ உலகுக்கு உயிரூட்ட.”


    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
Working...
X