Announcement

Collapse
No announcement yet.

Vishnu in Tiruppugazh

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vishnu in Tiruppugazh

    Vishnu in Tiruppugazh


    2. திருத்தணிப் பாடல்
    சூர்ப்பநகை வரவின் விளைவாக ராமாயணக் காவியத்தில் விளைந்த முக்கிய திருப்பங்களையும் திருத்தணிப் பாடல் ஒன்றில் மிக விரிவாகப் பாடியிருக்கிறார் அருணகிரியார்.
    மூக்கறை மட்டை மகாபல காரணி
    சூர்ப்பநகைப் படுமூளி உதாசனி
    மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி முழுமோடி
    ……………………………………………………
    …………………………………………………..
    மூத்த அரக்கனி ராவணனோடியல்
    பேற்றிவிடக் கமலாலய சீதையை
    மோட்டன் வளைத்தொரு தேர்மிசையே
    கொடு முகிலேபோய்
    மாக்கன சித்திர கோபுர நீள் படை
    வீட்டிலிருத்திய நாளவன் வேரற
    மார்க்க முடித்த விலாளிகள் நாயகன்''
    மூக்கறை–மூக்கறுப்பட்டவள்; மட்டை-மட்டகுணம் படைத்தவள்; மகாபலகாரணி-பெரும்பலம் பொருந்தியவள் (பெரும் தீனி உண்பவள்); சூர்ப்பநகை-முறம் போன்ற நகம் உடையவள்; படுமூளி- மூக்கறுப்பட்டதால் மூளி; உதாசனி-தீ போல் சுடும் கோபமுடையவள்; மூர்க்க குலத்தி-மூர்க்க குலமுடைய அசுரர் குலப்பெண்; விபீஷணர் சோதரி.
    கம்பன் சூர்ப்பநகையை "ராவணனுடன் உறை கடிய நோய்" என்பான். பிரம்மன், நோயை அவனுடலில் வைக்க முடியாமல் உடன் பிறக்க வைத்து விட்டானாம்!
    விபீஷணர் சோதரி.
    தீயப் பெண்ணை தீயவனான ராவணனது சோதரி என்று கூறாமல் தூயவரான விபீஷணர் சோதரி என்று ஏன் கூறுகிறார் அருணகிரிநாதர்? இதன் பின்னால் ஒரு கதை உண்டு.
    சங்கசூடன்-சுமுகி
    சத்திரவிரதன் எனும் அரசனுக்கு சங்கசூடன் என்ற மைந்தன் இருந்தான். கருத்துடன் கல்வி பயின்று வந்த அவனுக்கு, தனது குருவின் மகளாகியசுமுகி, தன் மீது காதல் கொண்டிருந்தது தெரியாது. ஒருநாள் அவன் குருவைத் தேடி அவர் வீட்டிற்குச் சென்றிருந்தபோத வீட்டில் சுமுகி தனித்திருந்தாள். அவள் சங்கசூடனிடம் தன் காதலைத் தெரிவித்தபோது,"குருவின் மகள் சகோதரி; இனிவரும் பிறப்பிலும் கூட நீ எனக்குத் தங்கைதான்" என்று மறுத்துக் கூறினான் சங்கசூடன்
    கோபமுற்ற சுமுகி, அவன் தன்னைக் கற்பழித்தான் என்று கூறித் தந்தையிடம் பழி மூட்டினாள். குரு இதை நம்பி அரசனிடம் கூற, அவனும் மகனைத் தீர விசாரிக்காமல், அவனைக் கற்பாறையில் கிடத்தி, கை கால்களை வெட்டும்படி உத்தரவிட்டான்.
    தர்ம தேவதையை நினைத்துப் புலம்பினான் சங்கசூடன். அச்சமயம் அவன் வெகுவாக மதிக்கும் ஆதிசேஷன் பூமியைப் பிளந்து வெளிவந்து, "உன்னைப் பற்றித் தவறாகப் பழி மூட்டிய சுமுகியை அடுத்த பிறப்பில் வந்து இடர் செய்வேன்" என்று சூளுரைத்துச் சென்றான்.
    விபீஷணன்-சூர்ப்பநகை
    அடுத்த பிறவியில் சங்கசூடன் விபீஷணனாகவும், சுமுகி சூர்ப்பநகையாகவும் பிறந்தனர். ஆதிசேஷனாகிய லட்சுமணன் அவள் அங்கங்களை அரிந்து அவமதித்தான். இந்த உயர்ந்த உட்கருத்தை விளக்கவே, அருணகிரியார் விபீஷணர் சோதரி என்று பாடி உள்ளார்.
Working...
X