Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்

    1#5e. ஹயக்ரீவன் (5)
    தேவி தோன்றினாள் விண்வெளியில் தேவருக்கு;
    தேவி கூறினாள் இனிய சொற்களால் தேவரிடம்.
    “காரணம் இன்றிக் காரியம் இல்லை அன்றோ?
    நாரணன் சிரித்தான் ஏளனமாக லக்ஷ்மியிடம்.
    ‘என் சிரிக்கிறார் இவர் என்னிடம் ஏளனமாக?
    என் முகம் அழகற்றுத் தோன்றியதா என்ன ?
    என்னிலும் அழகான இன்னொரு பெண்ணால்
    என்னை இகழ்ந்து பரிஹசிக்கின்றாரா இவர்?’
    கோபம் கொண்டாள் லக்ஷ்மி தேவி – அந்தக்
    கோபம் வியாபித்தது ஒரு தாமஸ சக்தியாக!
    “எள்ளி நகைத்தீர் நீர் என்முகத்தைக் கண்டு!
    துள்ளி விழட்டும் உம் தலை உடலிலிருந்து!”
    கணவனை இழந்து வாடும் துயரிலும் அதிகம்
    கணவனை சக்களத்தியுடன் பகிர்ந்து கொள்ளல்.
    மூர்க்கத்தனம், கொடூரம், சாஹசம், பேராசை,
    மாய்மாலம், பொய், பெண்களின் துர்குணங்கள்.
    சாபம் பலித்து விட்டது; சிரம் பறந்து விட்டது;
    தாபம் தீரும் வழி ஒன்று உண்டு கேள்மின்!
    லோக நன்மைக்கே நடந்துள்ளது இது – இனிச்
    சோகத்தை விடுத்துச் சொல்வதைக் கேள்மின்!”


    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
Working...
X