இப்போதே வணங்குங்கள்
ஒரு விவசாயின் மனைவி தினமும் தவறாது கோவிலுக்குச் செல்வாள். ஆனால் கணவனோ, அங்கெல்லாம் வர முடியாது என்றும், "செய்யும் தொழிலே தெய்வம்'' என்றும் வேதாந்தம் பேசுபவனாக இருந்தான். மனைவி, கணவனிடம் கடவுளை வணங்க வேண்டியதன் அவசியம் பற்றி சொல்லியும் அவன் கேட்வில்லை. மேலும் அவளிடம், "எனக்கும் கடவுளைப் பிடிக்கும். ஆனால், இப்போது அதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியாது. குழந்தைகள் வளர்ந்து ஆளான பிறகு, அவர்களை நல்ல நிலையில் வைத்துவிட்டு, இரண்டு பேரும் கடைசிக் காலத்தில் மொத்தமாக கடவுளை கும்பிடுவோம்,'' என்பான்.
அவளும் விட்டுவிட்டாள்.
ஒருமுறை அவனுக்கு காய்ச்சல் வந்தது.
டாக்டர் அவன் மனைவியிடம் மாத்திரைகள் கொடுத்து, "மதியம் ஒருமுறை, மாலை ஒருமுறை, இரவு ஒருமுறை கொடுங்கள்,'' என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
உடன் மனைவிக்கு ஏதோ பொறிதட்டியது. எனவே, கணவனுக்கு சரியான நேரத்தில் மருந்தைக் கொடுக்காமல் தாமதப்படுத்தினாள்.
இவனுக்கு உடல் கொதித்தது. அரற்ற ஆரம்பித்தான்.
"மருந்து கொடுக்க ஏன் தாமதிக்கிறாய்?'' என்று வாய்விட்டுக் கேட்டே விட்டான்.
"நீங்கள் தானே மொத்தமாக கொடு என்று சொன்னீர்கள்,'' என்றாள் அவள். ""நான் அப்படி சொல்லவில்லையே,'' என குதித்தான் அவன்.
"கடவுளை வணங்கும் விஷயத்தில், வயதான பிறகு மொத்தமாக கும்பிடலாம் என்பது உங்கள் கருத்து என்றால், மருந்து விஷயத்திலும் அது பொருந்தும் தானே! எனவே, இரவில் மூன்று வேளை மருந்தையும் மொத்தமாக உங்களுக்கு தரலாம் என இருந்தேன்,'' என அப்பாவி போல சொன்னாள்.
அவன் உண்மையை புரிந்து கொண்டான். அதன்பின் தினமும் தவறாது கோவிலுக்கு சென்று கடவுளை வணங்க ஆரம்பித்தான்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends