Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் continues

    1#5g. ஹயக்ரீவன் (7)
    “பிறவி எடுத்தவனுக்கு மரணம் நிச்சயம்!
    பிறவி எடுப்பான் மாண்ட பின்னர் மீண்டும்!
    நன்கு ஆலோசித்துக் கேள் தருவேன் உனக்கு,
    இன்னொரு வரம் இதற்குச் சமமானது!” என;
    எண்ணமிட்டான் ஹயக்ரீவன் தன் மனதில்;
    தன் மரணம் தன்னால் அன்றி நிகழக் கூடாது.
    “ஹயக்ரீவனான என் மரணம் நிகழ முடியும்
    ஹயக்ரீவனால் மட்டுமே என்னும் வரம் தா!”
    “ஹயக்ரீவனைத் தவிர வேறு எவராலும்
    ஹயக்ரீவன் உனக்கு ஏற்படாது அழிவு!”என;
    அரண்மனை திரும்பி, அட்டஹாசம் செய்தான்;
    அவனைக் கொல்ல ஒரு ஹயக்ரீவன் இல்லையே!
    மனோஹரமான குதிரையின் சிரசை எடுத்து
    விநோதமாகப் பொருத்துங்கள் விஷ்ணுவுக்கு.
    குதிரைத்தலை கொண்ட விஷ்ணு ஹயக்ரீவன்!
    அதிகத் துயர் தரும் அசுரனைக் கொல்ல இயலும்.
    பிரமன் பொருத்தினான் ஒரு குதிரையின் தலையை;
    பிரமாதமாகப் பொருந்தியது விஷ்ணு உடலில் தலை!
    ஹயக்ரீவர்கள் இருவரும் போர் செய்தனர் பின்பு.
    ஹயக்ரீவவிஷ்ணு ஹயக்ரீவாசுரனை வென்றார்.
    காரணமின்றிக் காரியமில்லை அது போவே
    காரியம் நடக்காது தக்க காரணம் இன்றேல்”


    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
Working...
X