Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் Continues

    1#6a. மது, கைடபர் (1)
    வெள்ளம் பொங்கியது சமுத்திரங்களில்;
    வெள்ளத்தில் மூழ்கிவிட்டன உலகங்கள்.
    அறிதுயில் கொண்டிருந்தான் நாரணன்
    குரும்பியில் தோன்றினர் மது, கைடபர்.
    வளர்ந்தனர் கடலில் பலசாலிகளாக;
    வாழ்ந்தனர் கூடி இரட்டையர் போல.
    ‘காரணம் இன்றிக் காரியம் நிகழாது!
    கடலுக்கு இருக்க வேண்டும் ஆதாரம்.
    கடலைப் படைத்தவர் யார்? நம்மைக்
    கடல் நீருக்குள் படைத்தவர் எவர் ?
    எங்கே உள்ளார் நமது தந்தையார்?
    எப்படியும் அறிய வேண்டும் இதனை!
    சக்தி தரமுடியும் நிலையான ஆதாரம்.
    சக்தி காரணமாகும் எந்த நிகழ்வுக்கும்.
    சக்தியே காரணம் நம் தோற்றத்துக்கு!’
    சக்தியைக் குறித்து அளவளாவினர்.
    ஒலித்தது வாக் பீஜ அக்ஷரம் வானத்தில்!
    ஒளிர்ந்தது மின்னல் வானொலிக்குப் பின்!
    ஆராய்ந்தனர் அசுரர்கள் ஒலி, ஒளி பற்றி!
    புரிந்தது அவை வெறும் ஒலி, ஒளி அல்ல!
    அக்ஷரத்தை நிலை நிறுத்தினர் மனத்தில்;
    அமர்ந்தனர் சமாதியில் ஆயிரம் ஆண்டுகள்.
    தவம் புரிந்தனர் ஐம்புலன்களை அடக்கி;
    தவம் புரிந்தனர் சக்தி தேவியில் லயித்து.


    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
Working...
X