Announcement

Collapse
No announcement yet.

Vishnu in Tiruppugazh

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vishnu in Tiruppugazh

    Vishnu in Tiruppugazh


    3. ராமசரம்
    அருணகிரியார் ராமனை, 'ராசரந்தொடு புங்கவன்' என்று கோடைநகரில் பாடுகிறார்:
    "ஏழு மரங்களும் வன்குரங்கெனும்
    வாலியும் அம்பரமும் பரம்பரை
    ராவணனும் சதுரங்க லங்கையும் அடைவேமுன்
    ஈடழியும்படி சந்திரனும் சிவ
    சூரியனுஞ் சுரரும் பதம்பெற
    ராமசரந்தொடு புங்கவன் மருகோனே!"
    4. உன் மாமனைப் போல் இருக்கிறாய்
    பாடல்-236 (சுவாமி மலை)
    முருகன் புகழைப் பாடும் அருணகிரியார், முராரி மருக கணையை எறிவதில் உன் மாமனைப் போன்றவனாய் இருக்கிறார் என்று கூறும் அழகே தனி!
    ……………………………………………………………….. ………………………………………………………………..
    வடிவுடைய மானு மிகல்கர னுந்திக
    ழெழுவகைம ராம ரமுநிக ரொன்றுமில்
    வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட …… லவையேழும்
    மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன்
    வகையிரவி போலு மணியும லங்க்ருத
    மணிமவுலி யான வொருபதும் விஞ்சிரு …… பதுதோளும்
    அடைவலமு மாள விடு சர அம்புடை
    தசரதகு மார ரகுகுல புங்கவன்
    அருள்புனை முராரி மருக விளங்கிய …… மயிலேறி
    அடையலர்கள் மாள வொருநிமி டந்தனி
    லுலகைவல மாக நொடியினில் வந்துயர்
    அழகியசு வாமி மலையில மர்ந்தருள் …… பெருமாளே.
    அழகுடைய மான், மாறுபட்ட கரன், ஏழு மராமரங்கள், ஒப்பற்ற வாலியின் மார்பு, ஏழு கடல்கள், வீரம் நிறைந்த அசுர சேனைகள், ராவணனது சிறந்த சூரியன் போல ஒளிவீசும் ரத்தின மணிகள் பதிக்கப்பட்ட பத்து முடிகள், இருபது தோள்கள் இவை அனைத்தும் சேர்ந்துள்ள வலிமை முழுதும் அழியுமாறு ஒரு கணை விடுத்த தசரத குமாரன்' என்று ராமனின் சரவேகத்தைப் புகழும் அழகிய சுவாமிமலைப் பாடல் இது!
Working...
X