Announcement

Collapse
No announcement yet.

திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல வேண்ட

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல வேண்ட

    திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல வேண்டிய மந்திரம்


    ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
    ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ
    தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம்
    நகோத்தம க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா
    பாபசேதஸ த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம்
    மாதவம் தர்சயஸ்வமே


    பொருள் :

    பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வெங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான ஹே மலையே! தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே! அதனால் ஏற்படும் எனது பாபத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீ வெங்கடேசனை தாங்கள் எனக்கு தரிசனம் செய்து வைத்து அருள வேண்டும்.
Working...
X