Announcement

Collapse
No announcement yet.

நிகழ்ந்ததும் நிகழாததும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நிகழ்ந்ததும் நிகழாததும்

    நிகழ்ந்ததும் நிகழாததும்


    கன்னட பக்தி இலக்கியத்தில் தவிர்க்கவியலாத பெயர் அக்கா மகாதேவி. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அக்கா மகாதேவி, சைவ பக்தி மரபில் வந்தவர். சிவனைக் கணவனாக ஏற்றுக்கொண்டு கவிதைகள் புனைந்தவர். மனிதக் காதலை நிராகரித்து தீராக்காதலோடு இறைவனைக் கண்டடைய முனைபவை அவரதது கவிதைகள்.


    அது லிங்கம் என்று நான்
    சொல்லவில்லை
    அது லிங்கத்துடனான
    இணைதல் என்று நான்
    சொல்லவில்லை
    அது ஒற்றுமை என்று
    சொல்லவில்லை
    அது இசைவு என்று
    சொல்லவில்லை
    அது நிகழ்ந்துவிட்டது என்று
    நான் சொல்லவில்லை
    அது நிகழவில்லை என்றும்
    சொல்லவில்லை.
    அது நீ என்று சொல்லவில்லை
    அது நான் என்றும்
    சொல்லவில்லை.
    சென்ன மல்லிகார்ஜுனாவின்
    லிங்கத்துடன் இணைந்த பிறகு
    நான் எதுவும் சொல்லவில்லை.


    என்ற கவிதை அவரது ஒட்டுமொத்தப் படைப்புகளில் கவிந்திருக்கும் கவித்துவ அமைதிக்கு ஓர் எடுத்துக்காட்டு.
    -- கவிதா முரளிதரன். கலை இலக்கியம்.
    -- ' தி இந்து ' நாளிதழ். சனி, டிசம்பர் 21, 2013.
    Posted by க. சந்தானம்
Working...
X