Announcement

Collapse
No announcement yet.

கருணை, பொறுமை, அன்பு பற்றிய 31 பொன்மொழிகள்...... &#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கருணை, பொறுமை, அன்பு பற்றிய 31 பொன்மொழிகள்...... &#

    கருணை, பொறுமை, அன்பு பற்றிய 31 பொன்மொழிகள்.... ரமணர்
    1
    ஆத்ம உபமந்யேன பூதேஷு தயாம் குர்வந்தி சாதவ: (ஹிதோபதேசம்)
    நல்லோர்,எல்லா உயிர்களையும் தன் இன்னுயிர் போலக் கருதி இரக்கம் காட்டுவர்.
    2
    கோ தர்ம க்ருபயா விநா (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)
    தயை (கருணை) இல்லாத தர்மம் உண்டா?
    3
    தயா மாம்சாசின: குத:? (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)
    புலால் உண்ணுவோரிடத்தில் கருணை உண்டா?
    4
    தயார்த்ரா: சர்வ சத்வேஷு பவந்தி விமலாசயா: (ப்ருஹத் கதா மஞ்சரி)
    தூய உள்ளம் கொண்டவர்கள் எல்லா பிராணிகளிடத்திலும் ஈர நெஞ்சம் உடையவர்களாவர்.
    5
    தர்மோ தயா பர: (சமயோசித பத்ய மாலிகா)
    கருணைக்கு மிஞ்சிய தர்மம் இல்லை.

    6
    சர்வேஷு பூதேஷு தயா ஹி தர்ம: (புத்தசரிதம்)
    எல்லா உயிர்களிடத்திலும் அன்புகாட்டுவதே தர்மம்
    7
    தாக்ஷிண்யாம் விரூபாமபி ஸ்த்ரியம் பூஷயதி (தூர்த்தநர்த்த)
    அழகற்ற பெண்களுக்கும் அழகு சேர்ப்பது இரக்க குணம்.
    8
    ப்ராய: சர்வோ பவதி கருணா வ்ருத்திரார்த்ராந்தராத்மா (மேகதூதம் 2-31)
    கனவான்கள் இயற்கையிலேயே இரக்க குணம் உடையோர்.
    9
    அருட் செல்வம் செல்வத்துள் செல்வம் – குறள் 241
    செல்வத்தில் சிறந்த செல்வம் அருளுடைமை (இரக்கம், கருணை)
    10
    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லைகுறள் 247
    உயிர்களிடத்தில் கருணை காட்டாதோர்க்கு சொர்க்கத்தில் இடமில்லை.
    11
    வலியார் முன் தன்னை நினைக்க – குறள் 250
    நம்மைவிட வலிமை வாய்ந்தவ்ரிடம் நாம் எப்படி நடுங்குவோம் என்பதை நினைத்துப் பார்க்க.
    12
    அல்லல் அருள் ஆள்வாருக்கு இல்லை — குறள் 245
    கருணை உடையோருக்கு துன்பம் என்பதே இல்லை.
    13
    பகைவனுக்கு அருள்வாய் – நன்னெஞ்சே
    பகைவனுக்கருள்வாய் – பாரதி
    14
    அலங்காரோ ஹி நாரீணாம் க்ஷமா து புருஷஸ்ய வா (ராமாயணம்)
    பெண்களுக்கானாலும் ஆண்களுக்கானாலும் பொறுமையே அணிகலன்.
    (ஒப்பிடுக: பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள் 154)
    15
    க்ஷமயேதம் த்ருதம் ஜகத் (மஹாபாரதம்)
    பொறுமைதான் உலகத்தையே தாங்கி நிற்கிறது.
    16
    க்ஷமா குணோ ஹ்யசக்தானாம் சக்தானாம் பூஷணம் க்ஷமா (மஹாபாரதம்)
    வலிவற்றவர்களிடத்தில் பொறுமை இருப்பது இயற்கை; பலமுள்ளவர்களிடத்தில் பொறுமை இருப்பது அணிகலன் ஆகும்.
    (ஒப்பிடுக: வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து-குறள் 155)
    17
    க்ஷமா ரூபம் தபஸ்வினாம் (சாணக்ய நீதி)
    தவம் செய்தவர்களின் இலக்கணம் பொறுமை ஆகும்
    (ஒப்பிடுக: வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-குறள் 153
    18
    க்ஷமா வசீக்ருதிர் லோகே க்ஷமயா கின்ன சாத்யதே (மஹாபாரதம்)
    பொறுமை என்பது எல்லோரையும் கவர்ந்திழுக்கும். உலகில் பொறுமையினால் சாதிக்க முதியாதது எது?
    (ஒப்பிடுக: பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் –குறள் 156)
    19
    க்ஷமா ஹி பரமா சக்தி:, க்ஷமா ஹி பரமம் தப: (புத்த சரிதம்)
    பொறுமையே மிகப்பெரிய சக்தி, பொறுமையே மிகப்பெரிய தவம்.
    (ஒப்பிடுக: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை –குறள் 151)
    20
    க்ஷமாம் ரக்ஷந்தி யே யத்னாத், க்ஷமாம் ரக்ஷந்தி யே சிரம் (பழமொழி)
    பொறுமையைக் கடைப் பிடிபோர் நீண்ட காலம் வாழ்வர்.
    (ஒப்பிடுக: பொறுத்தார் பூமி ஆள்வார்.)
    21
    ஞானஸ்யாபரணம் க்ஷமா (சாணக்ய நீதி)
    அறிவுடைமையின் இலக்கணம் (அணிகலன்) பொறையுடைமை.
    22
    க்ஷமயா கிம் சித்யதி (சாணக்ய சதகம் 13-22)
    பொறுமையினால் அடைய முடியாதது என்ன?
    23
    க்ஷமா ஹி மூலம் சர்வ தபஸாம் (ஹர்ஷ சரிதம்)
    எல்லா தவத்திற்கும் அஸ்திவாரம் பொறுமைதான்
    24
    க்ஷமா ஹி சக்தஸ்ய பரம் விபூஷணம் (ஜாதக மாலா)
    வலியோரின் பெரிய அணிகலன் – பொறுமை
    25
    ஒறுக்கும் மதுகை உரனுடையாளன்
    பொறுக்கும் பொறையே பொறை (நாலடியார்)
    எத்தகையோரையும் அடக்க வல்லவன் பொறுமையே சிறந்த பொறுமை
    26
    சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்
    பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே (வெற்றி வேர்க்கை)
    27
    நிர்வைர: சர்வ பூதேஷு ய: மாமேதி (பகவத் கீதை 11-55)
    எவ்வுயிரிடத்திலும் பகைமை இல்லாதவன் என்னை அடைகிறான்
    28
    ஸமோஹம் சர்வ பூதேஷு ((பகவத் கீதை 9-29)
    எல்லா உயிர்களிடத்திலும் சமமாயுள்ளேன் (எவரிடத்திலும் வெறுப்பு இல்லை)
    29
    லபந்தே பிரம்ம நிர்வாணம் …………சர்வபூதஹிதே ரதாப.கீதை 5-25)
    எவர்கள் எவ்வுயிரிடத்திலும் நன்மையே நாடுபவரோ அவரே பிரம்மனிடத்தில் முக்தியை அடைவர்.
    30
    உயிர்களிடத்தில் அன்பு வேணும்.—தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேண்டும் – பாரதியார்
    31
    அன்பு சிவம், உலகத் துயர் யாவையும் அன்பினிற் போகும் — பாரதியார்
    ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில்
    ஓங்கென்று கொட்டு முரசே – பாரதியார்
    –சுபம்-.

    Compiled by London swaminathan
    Last edited by S Viswanathan; 15-12-15, 06:47.
Working...
X