Announcement

Collapse
No announcement yet.

உதவி – உபகாரம் பற்றிய பொன்மொழிகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • உதவி – உபகாரம் பற்றிய பொன்மொழிகள்

    உதவி – உபகாரம் பற்றிய பொன்மொழிகள்

    மரங்கள் பழுப்பது ஏன்? நதிகள் ஓடுவது ஏன்?

    (1).பரோபகாராய பலந்தி வ்ருக்ஷா:
    பரோபகாராய வஹந்தி நத்யா:
    பரோபகாராய துஹந்தி காவ:
    பரோபகாரார்த்தம் இதம் சரீரம் – விக்ரம சரிதம்
    பொருள்:–
    மற்றவர்களுக்காகவே மரங்கள் பழுக்கின்றன
    மற்றவர்களுக்காகவே நதிகள் ஓடுகின்றன
    மற்றவர்களுக்காகவே பசுக்கள் பாலைப் பொழிகின்றன
    மற்றவர்களுக்காகவே இந்த உடல் இருக்கிறது

    (2).பரோபகாராய சதாம் விபூதய: – சமயோசித பத்ய மாலிகா
    நல்லோருடைய செல்வம் பிறருக்காகவே உளது

    (3).விபாதி காய: கருணாபராணாம் பரோபகாரைர்ன து சந்தனேன – பர்த்ருஹரி
    ஒருவனுடைய உடல் ஒளிருவது சந்தனத்தால் அல்ல; பிறருக்கு உதவி செய்வதன் மூலமே.

    (4).சர்வ பூத உபகாராச்ச கிம் அன்யத் சுக்ருதம் பரம் – கதாசரித் சாகரம்
    எல்லா உயிர்களுக்கும் உதவி செய்வதைவிடப் புண்ணியமானது எது?

    மனிதரில் முதன்மையானவன் யார்?

    (5).ஸ்வார்த்தோ யஸ்ய பரார்த்த ஏவ ந்ருணாம் அக்ரணீ: – பர்த்ருஹரி
    பிறர் நலனைத் தன்னலமாகக் கருதுபவனே மனிதரில் முதன்மையானவன்.

    (6).அனபேக்ஷித: குணதோஷ: பரோபகார: சதாம் வ்யசனம் – மஹாபாரதம்
    குற்றம், குறைகளைக் கருத்திற் கொள்ளாமல் நல்லோர் உதவி செய்வர்.

    (7).அனுத்ததா: சத்புருஷா: சம்ருத்திபி: ஸ்வபாவ ஏவைஷ பரோபகாரிணாம் – சாகுந்தலம்/ பர்த்ருஹரி
    வளமுள்ள, செழிப்பான காலங்களில் கூட நல்லோர் அடாவடித்தனம் செய்யமாட்டார்கள்; அவர்களுடையை இயல்பே பிறருக்கு உதவுவதுதான்.

    வெய்யிலை வாங்கி நிழலைத் தருவது மரங்களின் குணம்!

    (8).அனுபவதி ஹி மூர்த்னா பாதப: தீவ்ரமுஷ்ணம்
    சமயதி ப்ரிதாபம் சாயயா சம்ஸ்ரிதானாம் – சாகுந்தலம்
    மரங்கள் கடும் வெய்யிலைத் தலையில் தாங்கி, தன் கீழ் இருப்போருக்கு நிழலை மட்டும் தரும் (நல்லோரும் கடும் துயரங்களைச் சுமந்து பிறருக்கு உதவி செய்கிறார்கள்).

    (9).அஷ்டதச புராணேஷு வ்யாஸஸ்ய வசனத்வயம்
    பரோபகார: புண்யாய பாபாய பரபீடனம்- பஞ்சதந்திரம்
    பதினெட்டு புராணங்களிலும் வியாசர் சொல்வது இரண்டே வாக்கியங்கள்தான். 1) மற்றவர்களுக்கு உதவி செய்வது புண்ணியம் 2) மற்றவர்களுக்கு கெடுதல் செய்வது பாபம்.

    (10).தனானி ஜீவிதம் சைவ பராத்தே ப்ராக்ஞ உத்ஸ்ருஜேத் – ஹிதோபதேசம்
    அறிவாளிகள் தன்னுடைய பொருளையும், உயிரையும் பிறருக்காகவே செலவிட வேண்டும்.

    (11).நஹி க்ருதம் உபகாரம் சாதவோ விஸ்மரந்தி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)
    செய்த உதவியை நல்லோர் மறப்பதில்லை.

    சந்தன மரத்தில் குளிர்ச்சி இருப்பது யாருக்காக?

    (12).ஹி ஸ்வதேஹசைத்யாய ஜாயந்தே சந்தன த்ருமா: -(சு.ர.பா)
    சந்தன மரம் “தன்னுடைய” குளிர்ச்சிக்காக வளருவதில்லை

    (13).பரம் பரோபகாரத்தம் யோ ஜீவதி ஜீவதி — சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)
    பிறருக்காக வாழ்பவனே வாழ்பவன்.

    They alone live who live for others; the rest are more dead than alive
    Swami Vivekananda
    -சுபம்–
    Article written by London swaminathan
    Last edited by S Viswanathan; 15-12-15, 07:14.
Working...
X