Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் Continues

    1#9b. மது, கைடபர் (4)
    கண்டனர் நீண்ட தொடர் போராட்டத்தை
    விண்ணிலிருந்த பிரமனும், ஆதி சக்தியும்.
    ஆண்டுகள் ஐயாயிரம் உருண்டு விட்டன!
    மாண்டு போகவில்லை அசுரர் இதுவரை!
    களைப்படையவில்லை மது, கைடபர்கள்!
    களைப்படைந்தது விஷ்ணு மூர்த்தி தான்.
    பல ஆண்டுகள் தொடர்ந்து போரிட்டாலும்
    பலமும், சக்தியும் வளர்ந்தன அசுரர்களுக்கு.
    சோர்வுற்ற விஷ்ணு சிந்திக்கத் தொடங்கினார்,
    ‘ சோர்வின்றிப் போரிடுபவரை வெல்வது எப்படி?
    தந்திரமாகக் கொல்ல வேண்டும் இவர்களை! ‘
    சிந்திக்கத் தொடங்கினார் விஷ்ணு ஓர் உபாயம்!
    ‘வினோத வரம் பெற்றுள்ளார்கள் இவர்கள்!
    வினோதமாகக் காதுகளில் தோன்றிய அசுரர்!
    விரும்பும் போது மட்டுமே நிகழும் மரணம் !
    விரும்புவாரா எவரேனும் தன் மரணத்தை?
    மரணத்தை விரும்ப வேண்டும் இவர்கள்!
    சரணடைகின்றேன் சக்திதேவியிடம் நான்”
    ஜோதி ஸ்வரூபமாக விண்ணில் நின்றிருந்த
    ஆதி சக்தியிடம் முறையிட்டார் நாராயணன்.
    “அஞ்ச வேண்டாம் போரில் உனக்கே வெற்றி !
    வஞ்சிக்கிறேன் அசுரரைக் காமத்தில் வீழ்த்தி!
    சஞ்சலம் இன்றிப் போர் புரிவாய் அசுரருடன்;
    கொஞ்சமும் ஐயுறவேண்டா வெற்றி உனதே”
    உறுதி மொழி அளித்தாள் ஆதிசக்தி தேவி
    மறுபடி போரிட்டார் விஷ்ணு அசுரர்களுடன்.


    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
Working...
X