Announcement

Collapse
No announcement yet.

சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!

    நாவல் பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச பழம். எங்க ஊருல நவ்வாப்பழம்னு பேச்சு வழக்குல சொல்வாங்க. ஆத்தோரமா வளந்திருக்குற நாவல் மரங்கள்ல போட்டி போட்டு ஏறி பழம் பறிச்சி சாப்பிட்டதெல்லாம் ஒரு காலம்.
    நாவல் பழத்துல நிறைய சத்துக்கள் இருக்கு. நாவல் பழம் சாப்பிட்டா மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. நீரிழிவுக்கும் இது நல்லது. இதுல குறிப்பா நாவல் விதை சர்க்கரை வியாதிக்காரங்களுக்கு நல்ல மருந்து. நல்ல காய வச்ச புது விதைகளை இடிச்சி கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடணும்.
    பிறகு படிப்படியா சிட்டிகை அளவுல சாப்பிட்டாக்கூட போதும். விதைப்பொடியை அதிகமா சாப்பிட்டா நல்லதில்லை. அதேமாதிரி பழத்தையும் அதிகமா சாப்பிடக்கூடாது. நிறையபேர் பழம் ருசியா இருக்குன்னு சாப்பிட்டிருவாங்க. அப்பிடி சாப்பிட்டா நெல்லிக்காயை மென்னு தின்னுட்டு குளிர்ந்த தண்ணியை குடிச்சா போதும்.
    நாவல் மர வேர் கூட நல்ல மருந்துதான். ராத்திரி நேரத்துல வேரை ஊற வச்சி காலையில எழுந்திரிச்சி தண்ணியை மட்டும் குடிச்சாக்கூட சர்க்கரை நோய் சரியாகும். இது உடம்புக்கு குளிர்ச்சியை தர்றதோட ஆண்மைக்குறைவுக்கும் நல்ல மருந்து. வேர்ப்பட்டையை கசாயம் வச்சி குடிச்சிட்டு வந்தா வயித்துப்போக்கு சரியாகும்.
    இது எல்லாத்துக்கும் மேல நாவல் பழத்துல இருந்து ஜாம், ஜெல்லி, ஸ்குவாஷ் தயாரிக்கலாம். நிறைய உற்சாக பானங்கள்கூட தயாரிக்கிறாங்க.
    - எம்.மரிய பெல்சின்

  • #2
    Re: சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!

    சின்ன வயசிலே இலவசமா பரிச்சி தின்ற காலம் போய் இப்போ யானை விலை கொடுத்தாலும் கிடைக்க மாட்டேங்குது சார், . மெடிக்கல் ஷாப்லே நாவல்பழஜூஸ் வாங்கித்தான் சாப்பிடனும்.
    வரதராஜன்

    Comment


    • #3
      Re: சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!

      கடையில் விக்கிற ஜூ ஸ் எல்லாம் வாங்கி சாப்பிடாதே ஐயா அதெல்லாம் என்ன கன்றாவியோ.

      Comment


      • #4
        Re: சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!

        Not juices from the roadside vendors. Branded juices of Amla and Jamun(Naaval pazham) are available from standard pharmacies.

        Varadarajan

        Comment


        • #5
          Re: சர்க்கரை நோய் போக்கும் நாவல்பழம்!

          அப்ப சரி நெறைய சாப்பிடலாம்

          Comment

          Working...
          X