Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் continues

    1#9c. மது, கைடபர் (5)
    தொடர்ந்தது மல்யுத்தம் மீண்டும் அசுரருடன்;
    தளர்ந்து விட்டார் விஷ்ணு மிகமெலிந்து வாடி!
    தோன்றினாள் அம்பிகை ஜகன்மோஹினியாக!
    ஊன்றினாள் காமவிதையை அசுரர் நெஞ்சில்!
    கடைக் கண் பார்வை காமன் பாணமாகித் தாக்க;
    தடையின்றி விழுந்தனர் அசுரர் மோகவலையில்!
    மங்கையின் புன்னகை கள்வெறி ஊட்டியது!
    அங்க அசைவுகள் அலைக் கழித்தன அசுரரை.
    அறிவு கலங்கியது; உடல் முறுக்கேறியது.
    வெறுத்தனர் போர்த் தொழிலை இருவரும்.
    விரும்பினர் புவனசுந்தரியின் கருணையை.
    விஷ்ணு பேசினார் தேவியின் குறிப்பறிந்து.
    “வியக்கின்றேன் உங்கள் தோள் வலிமையை!
    வியக்கின்றேன் உங்கள் போர்த் திறமையை!
    அளிக்கின்றேன் உங்கள் வீரத்துக்கு ஒரு பரிசு;.
    தெளிவுபடுத்துங்கள் விரும்புவது என்ன என்று!”
    நகைத்தனர் அவ்விரு அசுரர்களும் அதைக் கேட்டு
    ‘பகைவனிடமும் இத்தனை நகைச்சுவை உணர்வா?’
    “யாசிப்பது உன் பழக்கம் ஆயிற்றே நாராயணா!
    யோசிக்கிறோம் நாங்கள் உனக்கு வரம் அளிக்க!
    தொடர்ந்து போர் புரிந்தாய் நீ எமக்குச் சமமாக;
    கடந்து ஐயாயிரம் ஆண்டுகள் சென்ற போதிலும்!
    என்ன வேண்டுமோ கேள் தயங்காமல் எம்மிடம்;
    சொன்ன சொல் தவறோம் அசுரர்கள் ஆயினும்!”
    “வெல்ல வேண்டும் நான் உங்களைப் போரில்!
    கொல்ல வேண்டும் நான் உங்களைப் போரில்!
    சொல்ல வேண்டும் இறக்க விரும்புவதாக!
    அல்லது நிகழாது உம் மரணம் அறிவேன்!”
    எதையாவது தந்து இவனை அனுப்பி விட்டு
    எளிதாகச் சுவைப்போம் மோகினியை எனக்
    கனவு கண்ட அசுரர்களுக்கு இந்த நிகழ்ச்சி
    நினைக்கும்போதே மனம் கசந்து வழிந்தது.
    ‘வரத்தை வைத்து விஷ்ணு எம்மை மடக்கினான்
    வரத்தை வைத்தே நாம் அவனை மடக்குவோம்!”


    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
Working...
X