பெரியார்.
எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா?
எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5. 1933 ந் தேதி மாலை 7:45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா, மகிழ்ச்சியடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு இலாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவுகட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.
நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா?
ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா?
இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா?
உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா?
ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா?
எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே!
* பெரியார் சுற்றுப்பயணம் செய்த தூரம் 8,20,000 மைல்கள்.
* அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் 10,700.
* உரையாற்றிய நேரம் 21,400 மணி நேரம்.
-- ( குடி அரசு - தலையங்கம் 14. 05.1933 ).
-- ' தி இந்து ' நாளிதழ். செவ்வாய், டிசம்பர் 24, 2013.
Posted by க. சந்தானம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends