Announcement

Collapse
No announcement yet.

Vishnu in Tiruppugazh continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vishnu in Tiruppugazh continues

    Vishnu in Tiruppugazh continues


    10. வேலவனின் வேறு பெயர்கள்!
     ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
     குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகை கோயில் கொண்டவன்.
     குமரன்: மிக உயர்ந்தவன், இளமை உடைவன், பிரம்மச்சாரி.
     முருகன்: அழகுகன் ; ஒப்புமையற்ற பேரழகன்.
     குருபரன்:கு= அஞ்ஞான இருள், ரு= நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றும் குரு. சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
     காங்கேயன்: கங்கையின் மைந்தன்.
     கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
     கந்தன்: கந்து – யானை கட்டும் தறி. கந்தன்-ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன். ஸ்கந்தன்-தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
     கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
     சரவணபவன்: சரம்= நாணல், வனம்=காடு, பவன்=தோன்றியவன்,
    நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
     ஸ்வாமி:ஸ்வம்=சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்குமட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
     சுரேஷன் : தேவர் தலைவன் சுரேசன்.
     செவ்வேள் : செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.
     சேந்தன் :செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
     சேயோன் : சேய்= குழந்தை, குழந்தை வடிவானவன்.
     விசாகன் : விசாக நட்சத்திரத்தில் உதித்தவன்.
     வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
     முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
     சோமாஸ்கந்தன் : ச – உமா – ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்.
     சுப்ரமணியன்: சு=மேலான, பிரம்மம்=பெரிய பொருள்-மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
     வள்ளற்பெருமான் : முருகன், மண்ணு வள்ளி இச்சா சக்தி மூலம் விண்ணுலக மங்கை தெய்வானை கிரியாசக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மைநலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
     ஆறுபடையோன்: மூலாதாரம், வாதிஷ்டானம், மணிபூரகம்,
    அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
     மயில்வாகனன் : மயில்-ஆணவம், யானை-கன்மம், ஆடு-மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
    தமிழ்=முருகன்; உதாரணமாக 12 உயிரெழுத்து=முருகனின் 12 தோள்கள்; 18 மெய்யெழுத்து=முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு. 6 இன எழுத்து = 6 முகங்கள்;. ஆயுத எழுத்து ஃ வேலை குறிக்கும்.
    வேலவனின் அறுபடை வீடுகளைக் குறிக்கும் சுந்தரனுபூதிப் பாடல்!
    உல்லாச நிராகுல யோக இதச்
    சல்லாப விநோதனும் நீயலையோ?
    எல்லாமற என்னை உணர்ந்த நலம்
    சொல்லாய் முருகாசுர பூபதியே
     உல்லாசம்-தெய்வானையை மணந்த திருப்பரங்குன்றம்
     நிராகுலம்– சூரசங்காரம் நிகழ்ந்த திருச்செந்துர்.
     யோகம்– யோகியாக நின்ற திருவாவினன்குடி
     இதம்– பிரணவத்தின் பொருளை சிவபெருமானுக்கு உபதேசித்த சுவாமிமலை.
     சல்லாபம்– வள்ளியை மணந்து, வள்ளியுடன் நின்ற திருத்தணிகை.
     வினோதம்– ஔவையாருக்காக பழத்தை உதிர்த்து விளையாடிய பழமுதிர் சோலை
    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
    Please click below to go to CONTENTS for all the Articles in HRE:
    https://drdayalan.wordpress.com/2015...-dr-a-dayalan/
Working...
X