Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் continues

    தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் continues
    1#10a. வியாசரின் தவம்


    மேருவின் சிகரத்தில் தவம் செய்தார் வியாசர்.
    விரும்பினார் ஒரு சத்புத்திரனைப் பெறுவதற்கு.
    வாக்பீஜம் என்னும் ஏகாக்ஷர மந்திரத்தை
    வான் வழியே வந்த நாரதர் உபதேசித்தார்.
    மாயையினால் தேவியை மறந்து விட்டார்
    மகாதேவனை தியானித்தார் வியாச முனிவர்.
    பஞ்ச பூதங்களின் வல்லமையைப் பெற்ற
    பிஞ்சு மகன் வேண்டும் என்பது அவர் தவம்
    அன்னபானம் விடுத்துப் புரிந்தார் தவம்
    ஆண்டுகள் ஒரு நூறு ஓடும் வரையில்!
    எத்தனை முயன்றும் காண முடியவில்லை
    புத்திர உற்பத்திக்கான அறிகுறிகள் எதுவும்.
    சக்தியின்றி சிவனை மட்டு தியானித்ததால்
    சந்ததியைப் பெறும் அறிகுறியே இலையோ?
    தீர்மானித்தார் “சத்புத்திரனைப் பெறுவேன்
    சக்தியைச் சிவனுடன் சேர்த்து தியானித்து!”
    உலகம் முழுவது பரவியது தவ ஜ்வாலை
    உள்ளம் ஒன்றி இமயத்தில் செய்த தவத்தால்.
    .
    கோபம் கொண்டான் இந்திரன் இது கண்டு!
    “கோபம் வேண்டாம் வியாச முனிவர் மீது
    தவம் செய்வது பதவியைப் பெறுவதற்கோ?
    தவம் செய்வது புத்திரனைப் பெறுவதற்கு!”
    கோபத்தைத் தணித்தார் சிவபெருமான்;
    தாபம் தீர வரமும் தந்தார் வியாசருக்கு.
    “சாந்தம், தேஜஸ், ஞானம், புகழ் பெற்ற
    சத்திய சீலனைப் பெறுவாய் மகனாக!”
    தவம் பலித்தது! வரம் கிடைத்தது!
    தாபம் தீரப் பிறப்பான் நல்ல மகன்!
    இருப்பிடம் திரும்பினர் வியாச முனிவர்,
    விரும்பினார் அக்னி காரியத்தை முடிக்க.
    அங்குத் தீக்கடையும் போது எண்ணினார்,
    “மங்கையுடன் சேராமல் மகன் பிறப்பானா?”


    வாழ்க வளமுடன் விசாலாக்ஷி ரமணி
Working...
X