Announcement

Collapse
No announcement yet.

Naming

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Naming

    Courtesy:Smt.Indra Srinivasan


    இப்போதெல்லாம் பெயர் வைப்பது என்பது பழைய காலம் போல சுலபமாக இல்லை. முன்பெல்லாம் சாமி பெயரை வைப்பார்கள்.


    குல தெய்வம் பெயர் வழி வழியாக வருவதுண்டு. அந்த சாக்கிலாவது, கடவுள் பெயரை உச்சரிக்க வேண்டும் என்பதுதான் உத்தேசம்.


    கடைசியில் ஸ்ரீனிவாசன் சீமாச்சுவாகவும், சுப்ரமணியன் சுப்புணியாகவும் உருத் திரிவது வேறு விஷயம்.
    இந்தக் கதையைக் கேட்டிருப்பீர்கள். திருமுருக கிருபானந்த வாரியார் சொன்னது என்று ஞாபகம். ஒரு பெரியவர். மரணப் படுக்கையில் இருக்கிறார்.


    அவரை எப்படியாவது சாமி பெயரைச் சொல்ல வைத்து விட வேண்டும் என்று உறவினர்கள் துடியாக இருக்கிறார்கள். அவருக்கோ இறை சிந்தனையே இல்லை.


    ஓர் உபாயம் செய்தார்கள். முருகன் என்ற பையனை எதிரில் கொண்டு வந்து நிறுத்தி, இவன் பெயர் என்ன? என்று தூண்டினார்கள்.


    பெரியவர், "முரு.." என்று ஆரம்பித்ததும் அனைவருக்கும் உற்சாகம். "ஊம். ஊம்" என்றார்கள். பெரியவர் வாக்கியத்தை முடித்தார். "முறுகலா ஒரு தோசை".


    ஆசை, தோசை என்பார்கள். தோசைக்கு ஒரு கதை சொன்னோம். ஆசைக்கு ஒரு கதை சொல்கிறோம்.
    ஒரு பணக்காரர் வீடு கட்டினார். புது மனை புகு விழா அன்று சிம்பாலிக்காக லட்சுமி என்ற பெயருடையவர் வீட்டுக்குள் அதிகாலையில் முதலில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
    லட்சுமி என்ற பெயருடைய வேலைக்காரியை அழைத்தார். "நாளை அதிகாலையில் என் வீட்டு வாசல் கதவைத் தட்ட வேண்டும். நான் உள்ளிருந்து வந்து, யார் என்று கேட்பேன். நீ லட்சுமி என்று சொன்னபடியே, உள்ளே நுழைய வேண்டும்."
    திட்டம் நன்றாகத்தான் இருந்தது.

    ஆனால் நடைமுறையில் ஒரு கோளாறு வந்து விட்டது.
    வாசல் கதவு தட்டப்பட்டது. நண்பர் கதவைத் திறந்தார். அங்கு லட்சுமி இல்லை. விளக்குமாற்றைத் தூக்கியபடி வேறொரு பெண்மணி நின்றார்.


    "லட்சுமி இல்லை?" என்று ஏமாற்றமாகக் கேட்டார் நண்பர். "இல்லீங்க, அவளுக்கு உடம்பு சரியில்லை. நான் அவ அக்கா.." என்றபடி விளக்குமாறும் கையுமாக நுழைந்தாள் அந்தப் பெண்மணி.


    இந்தக் காலத்தில் சாமி பெயர், முன்னோர்கள் பெயர், என்பதற்காக யாரும் வைப்பதில்லை.
Working...
X