திரு எம். ஆர்.ஜம்புநாதன்.

"பெங்களூர் தமிழ் சங்கம்" நூலகத்தில் பல நல்ல தமிழ் புத்தகங்கள் உள்ளன. நான் பெங்களூருக்கு நாற்பது வருடங்களுக்கு முன் வந்தவுடன் தமிழ் சங்கத்தில் வாழ் நாள் உறுப்பினராக சேர்ந்துகொண்டேன் . அங்கிருந்து எனக்கு பல நல்ல புத்தகங்களை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுதுதான் தமிழில் நான்கு வேதங்களின் மொழிபெயர்ப்புகளை முதன் முறையாகக் கண்டேன்.இவை நூலாசிரியரின் கையொப்பமிட்ட பிரதிகள் என்பது விசேஷமாகும். இவ்வரிய மொழிபெயர்ப்புகளை அளித்தவர் அறிஞர் திரு எம். ஆர். ஜம்புநாதன் என்பவராகும். இப்பெரியார் மணக்கால் ராமஸ்வாமி அவதானிகள் இலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு 1896ம் வருடம் பிறந்தவர் .திரு ஜகன்னாதன் வடமொழி, ஹிந்தி, ஆங்கில மொழிகளில் தேர்ச்சிபெற்றிருப்பினும், தாய் மொழி தமிழை மிகவும் நேசித்தார் . அதன் விளைவே அவரது மொழிபெயர்ப்புகள். தனது வாழ்நாளில் அதிக காலம் மும்பையில் வசித்த ஜகந்நாதன்அவர்கள், அங்கு தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்காக முதல் "முனிசிபல் தமிழ் பள்ளியை" தொடங்கினார். மகரிஷி சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் ஜாதிகள் கடந்த சமுதாயத்தை காணும் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அவரது "ஆர்ய சமாஜத்தில்" தீவிரமாக ஈடுபட்டார் . சுவாமிகளின் "சத்யார்த்த பிரகாஷ் "என்ற ஹிந்தி நூலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅவர் தீண்டாமையை அறவே ஒழிக்க தன்னால் இயன்ற எல்லா முயர்ற்சிகளையும் எடுத்தார் . அதன் விளைவே "நான் மறைகளை" தாய் மொழியாகிய தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் அவரது முயற்சியாகும். தனது வாழ்நாள் முழுவதையும் இதற்காகவே அர்ப்பணித்தார். ரிக் வேத மொழிபெய்ப்புக்குமட்டும் முப்பது ஆண்டுகள் உழைத்திருக்கிறார் , ஆயினும் ரிக் வேதத்தின் முதல் பாகம் அவரது மறைவிக்குப்பின் அவரது மனைவி சாந்தி ஜம்புனாதனால் வெளியிடப்பட்டது . வேதம் எல்லோருக்கும் பொதுவானது, அவை எல்லோருக்கும், குறிப்பாக, தாழ்த்தப்பட்டோருக்கு சேரவேண்டும் என்ற அவாவினால்,நான்கு வேதங்களையும் தமிழில் மொழிபெயர்த்தார்."யஜுர் வேத சத்பத ப்ரஹ்மணம்" என்ற அங்கத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலை "ஹரிஜனங்களின் பாதகமலங்களுக்கு" சமர்பித்திருக்கிறார் இப்பெரியவர்.

1974 ம் ஆண்டுவரை வாழ்ந்து வேத மொழிபெயர்ப்புக்க்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் தன்னை அற்பணிதுக்கொண்ட பெரியவர் திரு ஜம்புநாதன் அவர்கள் தமிழில் 16 நூல்களையும் ஆங்கிலத்தில் 3 நூல்களையும் தந்திருக்கிறார். ஒரு நிறுவனம் செய்யவேண்டிய பணியை ஒரு தனிமனிதனாக நின்று செய்து முடித்த இப்பெரியாரை இத்தலைமுறையை சேர்ந்த பலரும் அறிய வேண்டும் என்ற அவாவினால் எழுதி இருக்கிறேன்.

வணக்கத்துடன்
ப்ரஹ்மண்யன்
பெங்களூரு