Announcement

Collapse
No announcement yet.

சுண்டைக்காய்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சுண்டைக்காய்

    சுண்டைக்காய்

    சுண்டைக்காய் கிருமிகளை அழிக்க வல்லது. அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு நச்சுக் கிருமிகள் உடலில் தங்காது.

    சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய் தொற்றும், அதன் விளைவால் ஏற்படும் அரிப்பும் நீங்கும்.

    வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்படும்.

    சுண்டை வற்றலுடன் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான சாதத்தில் பொடித்துச் சேர்த்து சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும். வாயுப்பிடிப்புக்கும்

    சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் எலும்புகள் பலப்படும்.

    பக்கவாதம் பாதித்தவர்களுக்கு சுண்டைக்காய் மெல்ல மெல்ல குணம் தரும்.

    இது கொழுப்பைக் குறைக்க வல்லது.

    இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தடுக்க வல்லது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. ரத்த சோகையை எதிர்த்துப் போராடக் கூடியது.

    வாய் புண்களையும், சொத்தைப் பல் உருவாவ தையும் தடுக்கக் கூடியது.நரம்பு மண்டலத்துக்கு சக்தி தர வல்லது.

    சுண்டைக்காய். பார்வைத் திறன் அதிகரிக்கவும் நினைவாற்றல் கூடவும் உதவும்.
    Last edited by S Viswanathan; 15-01-16, 09:11.

  • #2
    Re: சுண்டைக்காய்

    நம் முன்னோர்கள் துவாதசி பாரணையில் நெல்லிக்காய்,அகத்திக்கீரை,சுண்டைக்காய் அவசியம் சேர்த்துக்கொள்ளவேண்டுமெனக் கூறுவதன் காரணம் புரிகிறது இப்போது.

    Comment

    Working...
    X